அவள் வருவாளா?!

பாலைவன பௌர்ணமியாய் பயனின்றி தேய்கின்றேன்
சாறில்லா கரும்பாக கோதாக கசக்கின்றேன்

ஆளில்லா ஓடத்தில் திசையின்றி திகைக்கின்றேன்
இலக்கில்லா அம்பாக வழியின்றி வாடுகிறேன்

சுவையில்லா குளம்பியில் சுவை சேர்க்க பாவையில்லை
இருள் சூழ்ந்த என் மனதில் சுடர் ஏற்ற மங்கையில்லை

இகழ்முகம் தான் மறைக்க மகிழ்முகம் நான் அணிந்தேன்
தவறிது என்றுரைக்க ஆளில்லை என்னருகில்

பாலையில் சோலை வர என் வாழ்வில் வா அன்பே
கோதாக நான் இருக்க சாறாக வா அழகே

ஓடமதை கரை சேர்க்க துருவ நட்சத்திரம் கேட்கின்றேன்
இலக்கில்லா என்னுலகில் வழியறிய விழைகின்றேன்

சுவையில்லா குளம்பியில் சர்க்கரையாய் வருவாயோ
இருள் சூழ்ந்த என் வாழ்வில் தாரகையாய் சுடர் தருவாயோ
மலர்முகம் நானிருக்க இகழ்முகம் இனி எதற்கு
வையகம் அழிந்தபின்னும் வாழ்க்கைத்துனை நான் உனக்கு

என செந்தாமரை சொலும் நாள் என்றோ…

What do you feel about this?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s