ஏன் நான் சினிமா பார்ப்பதில்லை?

Blogpost #2

சில மாதங்களுக்கு முன்பு நான் இனி சினிமா பார்ப்பதில்லை என்று ஒரு முடிவெடுத்தேன். காரணம் பல காலமாக ஒவ்வொரு திரைப்படம் பார்க்கும்போதும் எனக்குள் ஓர் உள்ளுணர்வு. இத்திரைப்படங்களை பார்ப்பதனால் எனக்கு என்ன கிடைக்கப்போகிறது என்று.

சினிமா பார்ப்பதனால் நேரம் தான் வீணாகிறது என்று எனக்குள் பதியத்தொடங்கிய காலக்கட்டம். ஆனால் உண்மையில் சினிமா பார்த்து நாம் வீணடிக்கும் நேரத்தை விட அந்த சினிமா பார்த்துவிட்டு அதை பற்றி நாம் மற்றவர்களிடம் பேசி தான் அதிக நேரத்தை வீணடிக்கிறோம் என்று தோன்றியது. அனைத்திற்கும் காரணம் சினிமா பார்ப்பது மட்டுமே, அதை நிறுத்திவிட்டால் பெரும் நேரம் சேமிக்க முடியும் என்று அவற்றை இனி பார்ப்பதில்லை என்று முடிவெடுத்தேன்.

அதற்கு இன்னொரு முக்கிய காரணம், நம் நாட்டில் சினிமாவிற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவமும், சினிமாக்காரர்களை நம் சமூகம் கொண்டாடும் விதமும் என்னை ஒரு வகையில் சினிமா மீது வெறுப்படையச்செய்தது. 

அதன்பிறகு என்னை சுற்றியுள்ளோர் என்னிடம் அவ்வப்போது வெளிவரும் படத்தை பற்றி பேசும்போதும், கேட்கும்போதும் நான் சினிமா பார்ப்பதில்லை என்று கூறினால் நான் என்னமோ வேற்று கிரகத்திலிருந்து வந்து, நான் உணவுண்பதில்லை என்றும் நீரருந்துவதில்லை என்றும் கூறியது போல் கேள்விக்கணைகள் தொடுக்கப்படும்.

இனி அப்படி யாராவது கேள்வி கேட்டால் இந்த பதிவை அனுப்பி படிக்க சொல்ல வேண்டியது தான்.

சிலர் என்னிடம் சில திரைப்படங்கள் மிகவும் நன்றாக இருக்கிறது, நல்ல கருத்தை சொல்கிறது, கண்டிப்பாக அனைவரும் இதைப் பார்க்க வேண்டும் என்று கூறும்போது கதைக்கேற்றாற்போல் பார்க்கலாமா வேண்டாமா என்று முடிவெடுத்துக்கொள்வேன். ஆனால், சிலர் சில திரைப்படங்களை பார்த்தே தீர வேண்டும், என்னடா இன்னுமா இந்த படத்தை பார்க்கல? என்று என்னமோ இன்னுமா டா இன்கம் டாக்ஸ் ரிட்டன் சமர்ப்பிக்கலை, தப்பு பண்ணிட்டியே டா என்பதாற்போல் கேட்பார்கள். அவர்களுக்கு என்னுடைய பதில்:

நல்ல நல்ல சினிமாக்கள் வந்துக்கொண்டே தான் இருக்கும். இதற்கு முடிவே இருக்கப்போவதில்லை. எனவே, அவ்வப்போது நமக்கு தேவைக்கேற்ப எடுத்துக்கொள்ள வேண்டியது தான். நம்மை சுற்றி இருக்கும் அனைத்துமே நம் தேவைக்கு தான். எவற்றை எப்போது எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது அவரவர் விருப்பமே. ஆனால் நிச்சயமாக நம் தேவைக்கு தான் எல்லாமேயன்றி, நம்மைச்சுற்றி இருப்பதை உண்டு தீர்க்க மட்டுமே நாம் இல்லை. பொழுதுபோக்கும் அப்படியே. 

சினிமாவில் திரைப்படங்கள், தொலைக்காட்சி நாடகங்கள், ஆட்டம், பாட்டம், கலை நிகழ்ச்சிகள் என அனைத்தும் அடக்கம். பொழுது போகவில்லையெனில் சிறிது நேரம் பார்த்து ரசித்து இளைப்பாற வந்தது தான் இவை அனைத்துமே. ஆனால், ஒரு புது திரைப்படம் வெளிவந்தால் அதைப் பார்ப்பதற்காகவே தான் நாம் இருக்கிறோம் என்பது போல் அதை ஒரு முக்கிய கடமையாக மாற்றி நம்மை அவை அடிமைப்படுத்திக்கொண்டன. மேலும், அவை நம்மை பிற பணிகள் செய்வதிலிருந்தும் தடுத்து நம் பெரும் பகுதியை ஆக்கிரமித்துக்கொள்கின்றன.

ஒரு நாளைக்கு அரைமணி நேரம் நாடகம் பார்ப்பதாகவோ அல்லது வாரத்திற்கு ஒரு திரைப்படம் என்று வைத்துக்கொள்வோம். எப்படி எடுத்துக்கொண்டாலும் நம் ஒட்டுமொத்த நேரத்தில் இரண்டு சதவீதத்தை அவை எடுத்துக்கொள்கின்றன. நிச்சயமாக என் வாழ்நாளில் இரண்டு சதவீதமென்றளவிற்கு அவை மதிப்பில்லை. அவ்வளவு தான் கணக்கு. 

வாழ்வில் எல்லாமே கணக்கா? அப்போது நமக்கு பொழுதுபோக்கே தேவையில்லையா? இதற்கு என் பதில்: நிச்சயமாக அனைவருக்கும் பொழுதுபோக்கு தேவை. ஆனால் சினிமா ஒன்று தான் பொழுதுபோக்கா? ஒருவனின் பொழுதுபோக்கு தேவை எப்படி வேண்டுமானாலும் தீர்க்கப்படலாம். அது புத்தகம் படிப்பதாக இருக்கலாம். தன்னந்தனியே மொட்டமாடியில் சிறிதுநேரம் நடப்பதாக இருக்கலாம். என் நண்பர்களுடன் இணையத்தில் அரட்டை அடிப்பதாக இருக்கலாம். அல்லது எதுவுமே செய்யாமல் அமைதியாக யோசிப்பதாகக்கூட இருக்கலாம். ஆனால் ஒருவருக்கு பிடித்த ஒன்று அனைவருக்கும் பிடிக்கவேண்டும் என்பதில்லை. அனைவருக்கும் பிடித்த ஒன்று எனக்கும் பிடிக்க வேண்டும் என்றுமில்லை. ஒருவரின் விருப்பு வெறுப்புகளே அவரை தனித்துவப்படுத்துகிறது.

அப்போ நீ சினிமாவே பார்க்கமாட்டாயா என்று கேட்டால் அப்படியுமில்லை. எனக்கு வெறுமையாக  இருக்கும்போது, பார்க்கவேண்டும் என்று தோன்றினால் நிச்சயமாக பார்ப்பேன். நாம் நமக்கு அமைத்துக்கொள்ளும் கொள்கைகள் நம் தேவைக்கும் விருப்பத்திற்கும் தானே தவிர அவற்றை கடைப்பிடிக்கவேண்டி நாம் இல்லை. 

ஆரம்பத்தில் என் நண்பர்கள் சினிமா பார்க்க அழைக்கும்போது மறுக்கத்தோன்றும். உண்மையில் பயனுள்ள முறையில் நம் நேரத்தை செலவிடுதல் எவ்வளவு முக்கியமோ அதை விட நம் சுற்றமும் நட்பும் நம்மை தேடும்போது அவர்களுடன் நேரத்தை செலவிடுதல் முக்கியம். இந்த நேரத்தில் இந்த பதிவை தட்டச்சு செய்து கொண்டிருக்கும் இதே நேரம், என் வீட்டிலிருந்து சென்னைக்கு என் நண்பர்களுடன் The Ghazi Attack எனும் திரைப்படத்தை பார்க்கத்தான் சென்று கொண்டிருக்கிறேன். வேறு வேலையும் உள்ளது.

சில நேரம் அலுப்பு காரணமாக Mr. Robot, Dr. Who, Sherlock, Seinfeld, Black Mirror, F.R.I.E.N.D.S., The Game of Thrones போன்ற ஆங்கில தொடர்களை பார்ப்பேன், அதுவும் மிகவும் அரிதாக. அப்போது அவை மட்டும் சினிமா இல்லையா என்று கேட்டால், ஆம் சினிமா தான். என்னால் முடிந்தவரை மிகுந்த வடிகட்டுதலுக்கு பிறகு பயனுள்ள அல்லது என் சுவைக்கேற்றாற்போல் தேர்ந்தெடுத்து பார்ப்பேன். அவ்வளவே. ஆனால், கடைசியாக நான் இவற்றை பார்த்து மாதங்கள் ஆகின்றன.

Last but not the least. As an Economist (சரி சரி, economics student), I’d like to add this. If we assume that we’re spending to see a movie every month from our 20 to average lifespan of 60 at the cost of 150 Rs per movie (inflation is elided for convenience). The total investment amount would be Rs. 72000. But that 150Rs invested every month in a scheme over a period of 40 years with average annualised return of 10%, the net worth of that amount would be more than 9.5 lakhs. Trust me, the numbers are magical but true. But I’m not responsible if the govt allegedly takes over a part of the money as tax! 

சினிமா மட்டுமல்ல. நான் தொலைக்காட்சி பார்ப்பதே மிகவும் குறைந்துவிட்டது. ஒரு மாதத்தில் மொத்தமாக ஒரு மணிநேரம் பார்ப்பதே மிக அரிதாகிவிட்டது. உண்மையில், நான் தங்கிருக்கும் அரையில் கடந்த 20 மாதங்களாக தண்ணீர், மின்சாரம், வாடகை என என்ன செலவுகளானாலும் அனைவரும் பகிர்ந்து கொள்வோம். ஆனால், தொலைக்காட்சி இணைப்பிற்கு மட்டும் என்னிடம் வாங்கமாட்டார்கள். காரணம்,  என் நண்பர்கள் எவரும் அறையில் இல்லையென்றாலும் கூட கடைசியாக அவர்கள் தொலைக்காட்சி ரிமோட் எங்கே வைத்து சென்றார்களோ எத்தனை மாதங்களானாலும் தொலைக்காட்சியும் சரி, ரிமோட்டும் சரி, எங்கு இருக்கிறது என்று கூட எனக்கு தேவைப்படாது. கல்லூரி மற்றும் பள்ளி காலங்களில் செய்திகளுக்காக வேண்டி அதிகம் தொலைக்காட்சியில் நேரம் கழிந்தது. தற்போது அது பல வகையில் கிடைக்கிறது.

Few would even ask me whether I’m utilising all my time usefully without wasting any of my time in useless things. I’m a human. Of course, I would waste my time. But it’s at my discretion to waste my time in the way I want. I don’t have any problem with that. Do you have any? 

இங்கு கூறியுள்ள அனைத்தும் என் சொந்த கருத்து மட்டுமே. யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல! இப்பதிவு நான் சினிமாவே பார்க்கமாட்டேன் என்று கூறுவதற்காக அல்ல. நான் சினிமா பார்க்காவிட்டாலும் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை, பார்த்தே ஆக வேண்டும் என்றுமில்லை என்று அழுத்தமாக பதிவு செய்வதற்கு மட்டுமே!

தமிழுக்கு செல்லினமும் ஆங்கிலத்திற்கு SwiftKey Neuralம் பயன்படுத்த கடினமாக இருந்ததால், இரண்டிற்கும் சேர்த்து SwiftKey பதிவிறக்கம் செய்து அதில் தட்டச்சு பயிற்சிக்கு ஆரம்பித்து இறுதியில் இந்த பதிவாக உருப்பெற்றுள்ளது.

படம்: மாயாஜால்.

What do you feel about this?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s