இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

Blogpost #3

பெண் – இறைவன் இவ்வுலகை அபிவிருத்தி செய்ய படைக்கப்பட்ட ஒரு உன்னதமான படைப்பு. ஆனால் இப்பதிவு பெண்ணுக்கான பதிவு அல்ல. ஒவ்வொரு ஆணுக்குமான பதிவு. ஒரு பெண்,

– தன் பெயரை மாற்றிக்கொண்டு
– தன் வீட்டையும் முகவரியையும் மாற்றிக்கொண்டு
– தன் குடும்பத்தை விட்டுப்பிரிந்து
– உன்னுடன் வந்து
– உனக்கென்று ஒரு வீட்டையும் குடும்பத்தையும் அமைத்து
– உன்னால், உனக்காக கற்பமாகி
– கற்பத்தினால் ஏற்படும் உடல்மாற்றங்களை எதிர்க்கொண்டு
– உடல் பருமனாகி
– பிரசவத்தில் உயிர்ப்போகும் வலியை ஏற்று உயிர்பிழைத்து
– தன் குழந்தைக்கு கூட தன் பெயரை அடையாளமாக இல்லாமல் உன் பெயரை தந்து

தான் இறக்கும் வரை அவள், சமைப்பது, வீடு சுத்தம் செய்வது, உனக்கு மட்டுமன்றி உன் பெற்றோருக்கும் பணிவிடை செய்து, ஒரு செவிலியராக பணிபுரிந்து, உன் குழந்தைகளை வளர்த்து, தேவைப்பட்டால் பொருளாதாரத்திலும் உனக்கு சுமையை குறைக்க தானும் சம்பாதித்து, உன்னை தன்னால் முடிந்தவரை ஓய்வாகவும் நிம்மதியாகவும் வைத்துக்கொண்டு, தன் குடும்பத்தை விட உன் குடும்பத்தையும் உன் உறவினர்களையும் பேணி, இது எதற்காகவேனும் தேவைப்பட்டால் தன் உடல்நலன், அழகு, கனவுகள், என அனைத்தையும் விட்டுக்கொடுத்து உனக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்ட ஓர் உயிர்.

இங்கு நீ அவளுக்கு செய்வதை விட என்றுமே அவள் உனக்கு அதிகமாகவே கொடுக்கும் குணநலன் கொண்டவள்.

எனினும் ஒரு நாளைக்கு நம் நாட்டில் 100 பெண்கள் கற்ழிபழிக்கப்படுகிறார்கள். இது வெறும் காவல்துறைக்கு வரும் வழக்கு விவரங்களின் அடிப்படையில் வரும் கணக்கு மட்டுமே. வெளியே சொல்லாமலும் சொல்ல முடியாமலும் தினந்தினம் வன்கொடுமைகளை அனுபவித்துக்கொண்டிருக்கும் பெண்கள் இருக்கும் வரையில் நாம் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் என்று கூறி என்ன பயன்?

1449005549-5398

வரதட்சனையில் தொடங்கி பாலியல் கொடுமை வரை, பிறந்ததில் தொடங்கி, இறக்கும் வரை பெண்களை குறிவைத்து நடக்கும் அநீதிகள் அதிகரித்துக்கொண்டே போகின்றன.

பெண்களை நல்ல முறையில் நடத்துங்கள். அவர்கள் உங்களிடம் அடைக்கலமாக உள்ளவர்கள். அதைத்தவிர அவர்களிடம் உங்களுக்கு வேறு எந்த உரிமை இல்லை.

– நபிமொழி.

தனக்கு பிறக்கப்போகும் குழந்தை ஆணாக இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பதில் தவறில்லை. ஆனால், இன்றும் தனக்கு பிறக்கும் குழந்தை, பெண்ணாக இருந்து விட கூடாது என்று வேண்டிக்கொள்ளும் பெற்றோரில் தொடங்கி, பையனுக்கு ஒரு படிப்பு, பெண்ணிற்கு ஒரு படிப்பு, என்று படிப்பு, செலவுகள், எதிர்ப்பார்ப்புகள் என்று அனைத்துமே பெண்கள் என்றால் குறைந்தவர்கள் என்றே நடத்தப்படுகிறார்கள்.

I think women are foolish to pretend they are equal to men. They are far superior and always have been.

– William Godling

Whatever you give a woman, she will make greater. If you give her sperm, she will give you a baby. If you give her a house, she will give you a home. If you give her groceries, she’ll give you a meal. If you give her a smile, she’ll give you her heart. She multiplies and enlarges what is given to her. So, if you give her any crap, be ready to receive a ton of shit!

– Erick S. Gray

பெண் ரத்தமும் சதையும் மட்டுமல்ல, கடவுளின் ஓர் உன்னதமான படைப்பு.  அதை பாதுகாக்கவே ஆணை பலசாலியாக இறைவன் படைத்தானே அன்றி அதை அச்சுறுத்தவும் அடக்கியாளவும் அல்ல. ஒவ்வொரு ஆண்டும் மார்ச்சு 8ம் நாள் பன்னாட்டு மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. உண்மையில் ஒரு பெண்ணின் மகத்துவத்தை புரிந்துக்கொண்ட ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பெண்ணையும் கண்ணியமாக நடத்துவோம். பெண்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை தடுத்து அவர்களை காப்போம்.

தாயாக, மனைவியாக, சகோதரியாக, மகளாக, தோழியாக எங்கும் எதிலும் மகிழ்ச்சியை மட்டுமே உணரவைக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.

What do you feel about this?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s