ஆட்டம் காணும் ஆளும் வர்க்கம் – ஓர் பொருளாதார பார்வை

கடந்த 40 நாட்கள் தான் கடந்த 40 மாத மோடி அரசிற்கு மிகவும் நெருக்கடியான நாட்களாக இருந்திருக்க முடியும். மக்களின் மனநிலை மாறுகிறது என ஆர்எஸ்எஸ் மத்திய அரசிற்கு எச்சரிக்கை விடுத்திருக்கும் வேளையில் மோடி அரசின் தேன்நிலவு காலம் முடிந்துவிட்டதை பல்வேறு அறிகுறிகள் வெளிப்படையாக உறுதிப்படுத்துகிறது. என்ன தான் இந்த ஆட்சியாளர்களிடையே எனக்கு கொள்கைரீதியிலும் நம்பிக்கைரீதியிலும் கருத்து வேறுபாடு இருந்தாலும் மோடி அரசு பதவி ஏற்ற பொழுது ஒரு பொருளாதாரம் படிக்கும் மாணவனாக நான் மோடி என்ன தான் செய்கிறார் நாட்டிற்கு என்று சற்றே நம்பிக்கையுடனேயே எதிர்பார்த்திருந்தேன். ஆனால் சமீபத்திய நிலைப்பாடுகளெல்லாம் அதை சுக்குநூறாக உடைத்தெரிந்ததென்றே சொல்ல வேண்டும்.

நாட்டின் ஜிடிபி வளர்ச்சி கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 5.7% ஆக குறைந்துள்ளது. சொல்ல போனால் கடந்த காங்கிரஸ் அரசு ஆண்ட பத்தாண்டுகளில், 2004-2014 நாட்டின் சராசரி ஜிடிபி வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 7.7% இருந்தது. அந்த பத்தாண்டுகளின் சராசரி வளர்ச்சி விகிதத்தை ஒரு முறை கூட மோடி அரசு தொடவில்லை என்பது மிகப்பெரும் தோல்வி என்பதை ஒப்புக்கொள்ள யாரும் இங்கே தயாராக இல்லை.

August 9: A resounding rebuff from the Election Commission during Ahmed Patel‘s re-election to the Rajya Sabha.
August 24: An unambiguous 9-0 unanimous signal from the Supreme Court: privacy is a fundamental right of every Indian citizen.
August 26: A stinging certificate of failure from the Reserve Bank of India on the November 8 demonetisation.
August 26: Timely reminder from Punjab & Haryana high court that “PM is of India, not of BJP” after handling of riots post Baba Ram Rahim conviction.
August 28: An embarrassing withdrawal from Doklam after the two-month-long standoff with China.
August 30: RBI announcing that GDP growth rate has slipped to its lowest in three years, plunging to 5.7 per cent.
September 5-12: A thorough repudiation of the politics of hatred and intolerance by citizens following the killing of journalist-activist Gauri Lankesh.
September 11: UN high commissioner for human rights expresses “dismay over increasing intolerance towards religious and broader minorities”.
September 13: BJP-backed students’ union ABVP handed a crushing defeat in the Delhi University Students Union elections.

இது இல்லாமல்,

August 30Anna Hazare, the RSS’s secret signal man, threatens to restart his stir for a Lokpal in Delhi after 39 months of non-action.
September 10: BJP president Amit Shah exhorts the youth not to “blindly believe anti-BJP propaganda being circulated on Facebook and WhatsApp.”
September 13: The RSS has “alerted the Modi government to signs of a shift in the public mood over the Modi government’s performance”.

(மேலே குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு செய்திகளுக்கும் மூல இணைப்புகள் ஒவ்வொரு தேதிகளுக்கும் கீழ் இணைக்கப்பட்டுள்ளது. நன்றி: churimuri.blog)

ஜிடிபிக்கு அடுத்து வாராக்கடன். நிதியமைச்சகத்தின் தரவுகள் படி நாணயமற்றவர்களாகக் கருதப்படும் கடனை திருப்பிச் செலுத்தாவர்களின் கடன் அளவு (வாராக்கடன்) 92,376 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த நிதியாண்டில் இதன் அளவு 76,685 கோடி ரூபாயாக இருந்து, 2016-17 நிதியாண்டில் இது 20.4 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது. விரைவில் அது ஒரு லட்சம் கோடியை தாண்டும் நிலையில் இந்த பிரச்சனையை சமாளிக்க வங்கிகள் எடுத்த முடிவே சேவைக்கட்டணம் மற்றும் ஏடிஎம் கட்டணம் அதிகரிப்பு. சில பணக்காரர்கள் செய்யும் தவறுகளுக்காகவும், வங்கிகள் மற்றும் அரசாங்கங்களின் இயலாமையை மறைக்கவும் பல கோடி சாதாரண மற்றும் நடுத்தர மக்களின் மீது ஏற்றப்படும் இச்சுமை சற்றும் ஏற்புடையதல்ல.

வங்கி
வாராக்கடன் தொகை (ரூ. கோடிகளில்)
ஸ்டேட் பேங் ஆப் இந்தியா 15069
பஞ்சாப் நேஷனல் வங்கி 10989
பேங் ஆப் பரோடா 4785
ஓரியன்டல் பேங் ஆப் காமர்ஸ் 4147
சென்ட்ரல் வங்கி 4023
ஆந்த்ரா வங்கி 3847
யூனியன் வங்கி 3588
பேங் ஆப் இந்தியா 3573

மேலே குறிப்பிடப்பட்டுள்ள வங்கிகளில் அதிக தொகை வாராக்கடனாக வைத்திருக்கும் பாரத ஸ்டேட் வங்கி தான் வங்கிக்கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு தொகையை 5000 ரூபாயாக ஆக்கி அதற்கு கீழே இருப்பு வைப்போருக்கு அபராதமாக மட்டும் 2000 கோடி ரூபாய் இந்த நிதியாண்டில் வசூலிக்க திட்டமிட்டுள்ளது. இப்படி ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள் எனில் மக்கள் தாங்கள் விருப்பப்படி பணப்பரிமாற்றம் செய்துக்கொள்ள சுதந்திரம் கொடுத்திருக்க வேண்டும். டிஜிட்டல் முறையில் தான் பணப்பரிமாற்றம் செய்ய வேண்டும் என கட்டுப்பாடுகள் விதித்து, ஆனால் அப்படி டிஜிட்டல் முறைக்கு மக்கள் மாறினால் அவர்களிடமிருந்து எப்படியெல்லாம் பணத்தை கொள்ளையடிக்கலாம் என்றே அரசாங்கங்களும் அரசுதுறை வங்கிகளும் செயல்படுகின்றன.

ஆதார் பே (Aadhar Pay), பீம் (BHIM) செயலி என கோடிக்கணக்கில் விளம்பரங்கள் செய்யப்பட்டு வரும் வேளையில் இன்று (செப்டம்பர் 18, 2017) கூகுள் நிறுவனத்தின் பணப்பரிமாற்ற செயலியான டெஸ் (Tez) செயலியை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அவர்கள் டெல்லியில் தொடங்கி வைத்தார் என்று செய்தி வருகிறது. சாதாரண சினிமாக்காரர்களை விளம்பரத்திற்கு ஈடுபடுத்தும் நிறுவனங்கள் அவர்கள் தன்னுடைய வேறு போட்டி நிறுவனங்களின் விளம்பரத்திற்கு இத்தனை ஆண்டுகள் நடிக்க கூடாது என்று ஒப்பந்தம் செய்து தான் தன்னுடைய விளம்பரங்களுக்கு அவர்களை உபயோகித்துக்கொள்ளும். ஆனால் ஒரு நாட்டின் நிதி அமைச்சர் ஒரு தனியார் நிறுவனத்தின் பணப்பரிமாற்றத்திற்கான செயலியை முன்னின்று தொடங்கி வைக்கிறார். பிறகு ஏன் மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கில் செலவு செய்து அரசாங்க பணப்பரிமாற்ற செயலிகளை விளம்பரம் செய்ய வேண்டும்? எதற்காக ஆதார் பே, எதற்காக பீம் செயலி?

ஆதார் பே மூலம் பணப்பரிமாற்றம் என்பது கடைக்காரர் நம் விரல்ரேகையை பதிவு செய்ய வைத்திருக்கும் சாதனத்தில் நாம் நம் ரேகையை பதிவு செய்யும்பொழுது அது நம் ரேகையை ஆதார் தகவல் களஞ்சியத்தில் தேடி நம் வங்கி கணக்கின் மூலம் நாம் அந்த கடைக்காரருக்கு பணம் செலுத்தும் பணப்பரிமாற்ற முறையாகும். இங்கு நம் விரல்ரேகையை பதிவு செய்ய அந்த கடைக்காரர் வைத்திருக்கும் அந்த சாதனம் எந்த நிறுவனத்தில் வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம். நம் ரேகையை பதிவு செய்யும் அந்த சாதனத்திலிருந்து நம் ரேகையை திருடுவது பெரிய கடினமான காரியமல்ல. ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் பே’வும் இதே தொழில்நுட்பத்தில் தான் வேலை செய்கிறது. எனினும் அதில் நாம் நம் ஸ்மார்ட்போனில் தான் நாம் நம் ரேகையை பதிவு செய்வோம். இன்று ஆதார் பே மூலம் பணப்பரிமாற்றம் செய்யும்பொழுது உங்கள் விரல்ரேகை திருடப்பட்டாலோ அந்த ரேகை மூலம் உங்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டாலோ அதற்கு வாடிக்கையாளரே பொறுப்பு என்று செய்தி வெளிடப்பட்டுள்ளது.

கேஷ்லஸ் இந்தியா, டிஜிட்டல் இந்தியா என்றவர்கள் 200 ரூபாய் கொண்டு வந்துள்ளார்கள். இன்னும் ஆயிரம் ரூபாய் நோட்டும் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் வந்துகொண்டிருக்கிறது. புது டிசைன்களில் 50, 200, 500, 2000 நோட்டுகள் யாவும் எனக்கு ஒன்றை தான் நினைவுபடுத்துகிறது. இந்த அரசின் செயல்பாட்டுகளிலிருந்து நான் கவனித்த ஒரு நிலைப்பாடு, அனைத்துமே அவர்களின் செயல்களாக மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கின்றனர். நிதி அமைச்சகத்தை பெயர் மாற்றி நிதி ஆயாக் என நிறுவியதில் தொடங்கி, பட்ஜெட் தேதியை நான்கு வாரம் முன்னாக்கி ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இணைத்தது, ஜிஎஸ்டி, எப்டிஐ என காங்கிரஸ் அரசு இருக்கும்போது பாஜக எதிர்த்த திட்டங்களை இன்று அவர்களே கொண்டு வருவது உட்பட. ஏன், இன்று பெரிதாய் பேசப்படும் புல்லட் ரயில் கூட காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் அதற்கு முதலில் அஸ்திவாரம் போட்டு அவ்வளவு தொகை செலவு செய்து ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மட்டும் போக்குவரத்து வசதி செய்வது உகந்ததல்ல என்று அத்திட்டம் வேண்டாம் என்று ஜப்பானிடம் அன்றே தெரிவிக்கப்பட்டது. இப்பொழுது நிதி ஆண்டை ஏப்ரலிலிருந்து மார்ச்சு வரை என்பதிலிருந்து ஜனவரி முதல் திசம்பர் வரை என்று மாற்ற முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஒரு கால மண்டலம் (Timezone) என்பதைப் பிரித்து இந்தியாவிற்கு இரண்டு காலமண்டலங்களை கொண்டுவரவும் முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.

ரயில்வே பட்ஜெட்டை முற்காலத்தில் ரயில்வே அமைச்சர் சுமார் ஒன்று முதல் சராசரியாக ஒன்னேகால் மணிநேரம் வரை வாசிப்பார். ஆனால் இன்று ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் சேர்த்து நிதி அமைச்சர் வாசிக்கையில் கால்மணிநேரம் கூட ரயில்வேக்கு ஒதுக்காத நிலையாக மாறியுள்ளது. விளைவு, பட்ஜெட்டில் அறிவிக்காமலேயே பல்வேறு விலையேற்றம் அமலுக்கு வந்துள்ளன. நடைமேடைச்சீட்டு (Platform ticket) விலை 20 ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது. இதைப்பற்றி ஒரு ஊடகமும் பேசவில்லை. இதுவே காங்கிரஸ் காலத்தில் விலையேற்றிருந்தால் நாடு முழுதும் இவர்கள் போராட்டம் செய்திருப்பார்கள். பெட்ரோல், டீசல் விலை உலகளவில் கடுமையாக வீழ்ச்சியடைந்த நிலையிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ச்சியாக ஏற்றப்பட்டு வருகிறது.

புல்லட் ரயில்! லட்சம் கோடி செலவில் 97,636 கோடி ரூபாயை ஜப்பான் இந்தியாவிற்கு கடனாக கொடுக்கிறது. அதை 0.1% வட்டி விகிதமாக தருவதை நினைத்து பிரதமர் பெருமிதம் கொள்வதை பார்க்க வேடிக்கையாய் உள்ளது. அந்த கடன் இந்திய ரூபாயில் வாங்கப்படவில்லை. ஜப்பானிய யென்னில் வாங்கப்படுகிறது. இந்திய ரூபாயின் பணவீக்க சதவீதம் சுமார் 3.78%. அதாவது இன்று 100 ரூபாய் என்பது அடுத்தாண்டு 103.78 கையில் இருந்தால் தான் சென்ற வருடம் 100 ரூபாய்க்கு இருந்த மதிப்பு. ஆனால் ஜப்பானின் பணவீக்கமோ எதிர்மறை (negative)ஆக இருக்கிறது. -0.5% முதல் 0.5% வரை. இன்று 100 யென் என்பது சென்ற ஆண்டு நம் கையில் 100.50% இருந்த மதிப்பு ஆகும். எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் 0.1% சதவீதமன்றி வட்டியே கிடையாது என்று வைத்துக்கொள்வோம். அப்படியென்றாலும் அவர்களின் பண மதிப்பு ஏற, நம் பண மதிப்பு குறைய கிட்டத்தட்ட அதுவே 4% வருகிறது.   சராசரியாக இந்திய ரூபாயின் பணவீக்கம் மற்றும் ஜப்பானிய யென்னின் பண மதிப்புயர்வும் சேர்த்து ஆண்டிற்கு 4.5% என்றாலும் ஐம்பது வருடத்திற்கு பின் வட்டியே இல்லையென்றாலும் 97,636 கோடி என்பது ஏழு லட்சம் கோடிக்கு மேல் வட்டி என வருகிறது.  

ஒரு வருடத்திற்கு 0.1% வட்டி என பார்த்தால் குறைவாக தெரியலாம். ஆனால் ஐம்பது வருடத்திற்கு 97,636 கோடி ரூபாயை கணக்கு போட்டால் கிட்டத்தட்ட இந்தியாவின் ஜிடிபியில் ஒரு சதவீதம் வருகிறது. இதை விட மோசமான திட்டம் வேறு எதுவும் இருக்கும் என்று தோன்றவில்லை. ஆனால் இந்த அடிப்படை பொருளாதாரம் கூட தெரியாதவர்கள் நம் நாட்டை ஆளுகிறார்கள் (நம் எதிர்கால சந்ததியையும் கடன்காரர்களாக அவர்களின் எதிர்காலத்தையும் விற்கிறார்கள்) என்றென்னும்போது இந்த அரசாங்கத்தின் மேல் கோபம் கொள்ளாமல் என்ன செய்ய? (ஜப்பானின் ஜிடிபியில் 250% அதிகமாக கடன் அதிகமாக உள்ள நிலையில் அங்கேயே முதலீடு செய்யாமல் வெளிநாட்டில் காரணம் இல்லாமல் முதலீடு செய்ய அவர்கள் முட்டாட்கள் இல்லை நம் போல் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ள)

நாட்டினை முன்னேற்றுகின்ற திட்டங்களில் Future Discounted Cash flow விகிதங்கள் சிக்கல் இல்லை. பல மாநில தலைநகரங்களில் உலக வங்கி உதவியோடு வாங்கிப் போடப்பட்ட மெட்ரோ திட்டம் தலையெடுக்கவே இன்னும் 20-25 ஆண்டுகள் ஆகும். இந்த நிலையில் எந்த நம்பிக்கையில் மோடியார் இதையெல்லாம் செய்கிறார் என்று புலப்படவே இல்லை. ஒரு வேளை, 2030 போல தான் பிரதமராகவோ, தன்னுடைய கட்சி ஆட்சியிலோ இருக்கப் போவதில்லை, அதைப் பற்றி நாம் எதற்கு கவலைப்பட வேண்டுமென்று நினைக்கிறாரோ என்னவோ. ஏற்கனவே உலகளாவிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு ரேஷன் கடைகளை மூடுவது என்பதற்கே இந்தியாவில் பல இடங்களில் வெடிக்கிறது. இந்த இலட்சணத்தில் 2067 வரைக்கும் கடன் வாங்கி புல்லட் ரயில் விடவில்லை என்று யார் அழுதார்கள்?

97,636 கோடியில் என்னென்ன செய்யலாம் என்று கணக்கு போட்டு பார்த்தால்:

க) நாட்டிலுள்ள 7137 ரயில் நிலையங்கள் உலகத்தரமாக மாற்றியிருக்கலாம்.
ங) நாட்டில் ஓடிக்கொண்டிருக்கும் எல்லா ரயில்களிலும் பயோடாய்லெட்கள் பொறுத்தியிருக்கலாம்.
ச) 150 புதிய அதிவேக ரயில்கள் விட்டிருக்கலாம்.
ஞ) இதெல்லாம் செய்து மீதம் 3500 கோடி ரூபாய் சேமித்திருக்கலாம்.
ட) அதாவது ஒரு வருடத்திற்கு 4,10,43,761 குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கியிருக்கலாம்.

இதில் புல்லட் ரயிலை பெரிய சாதனையாகப் படிக்க வெறுப்பாய் இருக்கிறது. ஏற்கனவே 2000 ரூபாயில் டிக்கெட் விற்கும் விமான பாதையில் லட்சம் கோடிகளில் கடன் வாங்கி செலவு செய்து அதே விலைக்கு ரயில் கொடுக்கும் திட்டத்தை கொண்டுவரும் மேதாவித்தனம் அன்றி வேறென்ன சொல்ல!

எப்படிப் பார்த்தாலும் இந்த புல்லட் ரயில் சுமை என்பது அடுத்த 15 ஆண்டுகளுக்கு உடனடியாக நம்மை பாதிக்கா விட்டாலும் (15 Years Moratorium), நீண்ட கால நோக்கில் பெரும் சுமையாகவும், அழுத்தமாகவும் மாறும். இந்த கடனை ஜெனடிக்கல் டிஸ்ஸார்டர் போல நாம் தலைமுறை தலைமுறையாக தள்ளுவோம். இது இந்திய ஒன்றியத்தை தொடர்ச்சியான கடன் சுழற்சியில் (Debt Cycle) தள்ளி நம்முடைய வளர்ச்சியை பாதிக்கும். ஐந்தில் ஒரு பங்கு மக்கள் தொகை முழுமையாய் மூன்று வேளை உணவு கூட உண்ண முடியாத நாட்டிற்கு இது இப்போதைக்கு தேவையா?

மேலும் உலகிலேயே மிகப்பெரிய புல்லட் ரயில் நெட்வர்க் கொண்ட நாடு சீனா. அந்த நாடு இதே 500 கிலோமீட்டர் புல்லட் ரயில் போட சுமார் 50,000 கோடி தான் ஆகும் என்று கூறுகையில் எவ்விட டெண்டரும் விடாமல் நேரடியே இரட்டிப்பு விலைக்கு (உண்மையில் பணவீக்கம், ஐம்பது வருட கூட்டு வட்டி எல்லாம் கணக்கு போட்டால் பத்து மடங்கிற்கும் மேல்) ஜப்பானிடம் இந்த தொழில்நுட்பத்தை அதிக விலை கொடுத்து நம் நாடு வாங்குவதேன்? பூஜ்யத்திற்கு அருகிலே உள்ளதால் 0.1% வட்டியில் ஜப்பான் நமக்கு கடன் கொடுப்பதை பெருமையாக கூறிய நம் பிரதமர் உண்மையில் தெரிந்து தான் செய்கிறாரா இல்லை வேண்டுமென்றே செய்கிறாரா இல்லை என்ன செய்வதறியாது செய்கிறாரா தெரியவில்லை. ஆனால் நம் பொருளாதாரம் பெரும் சரிவை சந்திக்கப்போவது நிச்சயம். ஒரு வருட பொருளாதார படிப்பை மட்டுமே முடித்த எனக்கே இவ்வளவு சிக்கல்கள் புரியும்பொழுது பொருளாதாரமே தெரியாத மூடர்களிடம் நாட்டின் நிர்வாகம் சிக்கினால் நடக்கும் விளைவுகளைப் பார்த்து பொருளாதார நிபுணர்கள் என்ன தான் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. பொருளாதார ஆலோசகர்கள், நிதி அமைச்சகம், நிதி ஆயாக் எல்லாம் என்ன கிழிக்கிறார்கள் என்று ரௌத்திரம் பொங்குகிறது.

அஹமதாபாத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மென்ட் (IIM-A)விலுள்ள பேராசிரியர்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் ஒரு நாளைக்கு 100 முறை இந்த புல்லட் ரயிலை இயக்கினால் மட்டுமே இந்தத் திட்டம் பொருளாதார ரீதியில் தன்னிறைவு பெற முடியும் என்று கூறுகிறது. அப்படியென்றால் ஒவ்வொரு மூன்று மணிநேரத்திற்கும் இரண்டு திசைகளிலும் ஒரு ரயில் செல்ல வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு திசைகளிலும் 50 முறை இயக்கப்பட வேண்டும். நாளொன்றுக்கு 88,000 முதல் 110,000 பேர் வரை ஏற்றிச்சென்றால் மட்டுமே குறிப்பிட்ட ஐம்பது வருடத்திற்குள் பெற்ற கடனை அடைக்க முடியும் என்று கூறுகிறார்கள். ஆனால் இதில் பணவீக்கம் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. உண்மையில் எவ்வளவு பணவீக்கம் இருக்கப்போகிறது என்பதை காலம் தான் பதில் சொல்லும். எப்படியானாலும் பணக்காரர்கள் மட்டுமே பயணம் செய்யப்போகும் திட்டத்திற்கு நாடு முழுதும் அடித்தட்டு மக்கள் மீது வரிச்சுமை ஏறப்போவது உறுதியாகத்தெரிகிறது. மேலும் பல மடங்கு கடன்சுமையில் சிக்கித்தவிக்கும் ஜப்பான் போன்ற ஒரு நாடு மென்மேலும் வட்டி ஏறிக்கொண்டிருக்கிறது என்றறிந்திருந்தும் அவர்களின் கடனை திரும்ப அடைக்காமல் இந்தியாவிற்குக் கடன் தந்து அவர்கள் நம் நாட்டில் ஏன் முதலீடு செய்ய மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர் என்று எவரேனும் சிந்தித்துப் பார்த்தார்களா?

காங்கிரஸ் காலத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை ஏற்றப்பட்டபோது பெரும் போராட்டங்களில் இறங்கிய பாஜக இன்று ஒவ்வொரு நாளும் பொறுமையாக தொடர்ச்சியாக பெட்ரோல் டீசல் விலையை ஏற்றிக்கொண்டிருக்கிறது. உண்மையில் ஒவ்வொரு நாளும் தங்கம் மற்றும் வெள்ளி விலையைப்போல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறையே மக்களை ஏமாற்றும் ஒரு வழி தான். அவ்வப்போது ஏற்றினால் ஒவ்வொரு முறை ஏற்றும்போழுதும் தலைப்புச்செய்திகளாய் வரும். மக்களின் எரிச்சலையும் எதிர்ப்பையும் பெற வேண்டி இருக்கும். ஆனால் தினமும் ஏற்றி இறக்கினால், ஆரம்பத்தில் கவனத்தை ஈர்த்தாலும் நாளடைவில் தங்கம் மற்றும் வெள்ளி விலை போல் ஏதோ ஒரு பக்கத்தில் ஒரு துண்டு செய்தியாக அதுவும் வரும் நிலை வந்துவிடும். மக்கள் பெரிதாகக் கண்டுக்கொள்ள மாட்டார்கள் என்று கணக்கு போட்டனர். இப்படி பெட்ரோல் விலை, டீசல் விலை, ரயில் கட்டணம் என ஒவ்வொன்றாக எப்படி மக்களின் நேரடி கவனத்தை மறைத்து விலையேற்றம் செய்யலாம் என்று ஒவ்வொன்றாக நடப்பதைக் கண்கூடாக பார்க்க முடிகிறது. பெட்ரோல், டீசல் விலைவிதிப்பு முறை பற்றியும், ஏன் அவ்வளவு விலை இருக்கிறது என்பது பற்றியும், ஏன் அதற்கு ஜிஎஸ்டி வரி விதிக்கவில்லை என்பது பற்றியும், வருமான வழிகளை பெருக்காமல் அரசு நிறுவனங்களை தனியாருக்குக் கொஞ்சம் கொஞ்சமாக விற்கும் முறை எப்படி நம் நாட்டின் வருமானத்தை குறைத்து மேலும் மேலும் நம் மீது வரிவிதிப்பை அதிகரிக்கும் என்பது பற்றியும் நான் ஏற்கனவே என் வலைப்பக்கத்தில் எழுதிய முந்தைய பதிவைப் படிக்க: தவறான இந்திய பொருளாதார கொள்கை!

C5-XKAXUoAEoVl221731838_1881534082107282_7001735196726550686_o

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் உலகளவில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 120 டாலர்கள் இருந்த நிலையில் பெட்ரோல் விலை 70 ரூபாயளவில் இருக்க, இன்று கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 50 டாலருக்கும் கீழ் உள்ளது. எனினும் பெட்ரோல் விலை முன்பை விட அதிகமாகவும் மேலும் மேலும் ஏற்றப்பட்டுக்கொண்டே உள்ளது. என்னுடைய முந்தைய பதிவை பார்த்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் வெறும் 26 ருபாய் மட்டுமே, வரிகள் யாவும் தவிர்த்து. ஆனால் எப்படியானாலும் வாங்கத்தான் போகிறார்கள் என்னும் நிலைப்பாடே மேலும் மேலும் விலையேற்றத்திற்கும் அதிகப்படியான வரிக்கும் காரணம்.

சில தினங்களுக்கு முன் மத்திய அமைச்சராக பதவியேற்ற அல்போன்ஸ் கன்னந்தானம் அவர்களின் கருத்து அதை உறுதி செய்கிறது.

alphone statement

“பெட்ரோல் மற்றும் டீசலை சரக்கு, சேவை வரியின் கீழ் கொண்டு வர வேண்டும்” – தர்மேந்திர பிரதான் (மத்திய பெட்ரொலியம், இயற்கை வாயு மற்றும் திறன்மேம்பாட்டு துறை அமைச்சர்

ஆனால் அமைச்சர் அவர்கள் இதை யாருக்கு கூறுகிறார் என்று தான் தெரியவில்லை. அப்சல்யூட் மெஜாரிட்டி எனப்படும் பெரும்பான்மை பலம் கொண்ட பாஜக வெறும் மழுப்பல்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. உண்மையை சொல்லப் போனால் இந்த அமைச்சரவையில் பொருளாதாரம் அறிந்தோர் யாரும் இல்லை என்று தான் தோன்றுகிறது. இந்த மூன்றே கால் வருடத்தில் இந்த ஆட்சியால் நல்லது எதுவுமே நடக்கவில்லையா என்று கேட்டால் எனக்கு தெரிந்து வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் கடவுச்சீட்டு (Passport) பெரும் முறைகள் மிகவும் எளிமைப்படுத்தப்படுள்ளன. நான் தனிமனிதனாக எனக்கு நடந்த நல்லதென்றால் இந்த மூன்றாண்டுகளில் இது மட்டுமே.

இன்று உத்தரப் பிரதேசத்திலுள்ள லக்னோ பல்கலைக்கழகம் அதன் கீழுள்ள 159 உறுப்புக்கல்லூரிகளிலும் அனைத்துக் கட்டணங்களிலும் 18% ஜிஎஸ்டி வரி வசூலிக்க போவதாய் கூறுகிறது. உண்மையிலேயே இந்த நாட்டு மக்கள் எல்லாவற்றிற்கும் அதிகக் கட்டணம் கட்டித்தான் பெற வேண்டுமெனில் எதற்காக அரசாங்கம் என்றே தெரியவில்லை. இவ்வாறு பல்வேறு குழப்பங்களிலும் கொள்கை நிலைப்பாட்டில் உறுதித்தன்மை இல்லாமையும் இந்த அரசாங்கத்திடம் வெளிப்படையாக காண முடிகிறது.

ஸ்வச் பாரத் என்று திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இன்றும் மனித மலத்தை மனிதர்கள் தான் அல்லும் அவலநிலை மாறவில்லை. அனைத்து சேவைகளுக்கும் ஸ்வச் பாரத் வரி வசூலித்தது தான் மிச்சம். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற க்ரிஷி கல்யான் என்று வேறு ஒரு வரி கொண்டுவரப்பட்டது. ஆனால் விவசாயிகள் இன்றும் அரைநிர்வாணமாய் டெல்லியில் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். மேக் இன் இந்தியா என்ற இந்திய வியாபாரிகளை விடுத்து வெளிநாட்டு நிறுவனங்களுக்குச் சலுகை விலையில் நிலம், மின்சாரம் என வசதிகள் செய்யும் திட்டமும் தோல்வியடைந்ததாகவே தெரிகிறது. காரணம் அத்திட்டம் என்ன தான் நம் மக்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்குச் சந்தையாக விற்றாலும் வேலைவாய்ப்பை பெருமளவில் உருவாக்கும் என நம்பப்பட்ட நிலையில் வேலைகள் யாவும் பெருமளவில் உருவாக்கப்படவில்லை என்பதே நிதர்சனம்.

இன்று ஜிஎஸ்டி வரியால் பல்வேறு அடிப்படை பொருட்களின் விலையும் மிகவும் உயர்ந்துள்ள நிலையில் அதை வெற்றி என கொண்டாடுகின்றனர். பாமர மக்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழலில் பெட்ரோல் டீசல் விலையேற்றம் மற்ற அனைத்து பொருட்களின் விலையையும் மேலும் மேலும் ஏற்றி பணவீக்கத்தை ஏற்படுத்துகிறது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தவேண்டிய ரிசர்வ் வங்கி மௌனம் சாதிக்கிறது.

டீமானிடைசேஷேன் பொழுது ரிசர்வ் வங்கி தலையிட்டிருந்தால் இந்திய பொருளாதாரம் இத்தனை பெரிய வீழ்ச்சியை சந்தித்திருக்காது. ஆனால் இன்று மதிப்பிழக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளில் 99% மீண்டும் வங்கிகளுக்குள் வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி கூறுகிறது. அப்படியானால் மத்திய அரசை அன்றே இது குறித்து எச்சரித்திருக்கவேண்டிய ரிசர்வ் வங்கி அமைதி காத்ததா அல்லது இப்படிப்பட்ட விளைவுகள் வரும் என்று ரிசர்வ் வங்கியால் அன்று அனுமானிக்க முடியவில்லையா? அல்லது ரகுராம் ராஜன் என்ற தனி நபர் மாறியதும் மொத்த ரிசர்வ் வங்கியும் மத்திய அரசின் மறைமுக கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதா?

குஜராத் கலவரம் குறித்த அம்மாநில புலனாய்வு நிறுவனம் அம்மாநில முதல்வர் மோடி அவர்கள் அக்கலவரங்களில் தொடர்பற்றவர் என்று புலனாய்வு முடிவு செய்து அவரை குற்றமற்றவர் என்று தெரிவித்தது. அன்று அந்த புலனாய்வு குழு தலைவராக இருந்த ஒய்.சி.மோடி என்ற ஐ.பி.எஸ். அதிகாரி இன்று தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ. வின் தலைவராக நியமிக்கப்படுகிறார்.

ரிசர்வ் வங்கி ஆளுநர், தலைமை தேர்தல் ஆணையர், இந்தியாவின் குடியரசுத்தலைவர், துணை குடியரசுத்தலைவர், தலைமை நீதிபதி, பெரும்பான்மை மாநில ஆளுநர்கள் (இன்னும் சிஏஜி எனப்படும் நாட்டின் தலைமை தணிக்கைக்குழு தலைவர் – Comptroller and Auditor General of India தான் பாக்கி, அங்கும் சில தினங்களில் புதிய தலைவரை மத்திய அரசு நியமிக்கும்) என அனைத்து உயர் பதவிகளிலும் நியமனங்களிலும் மத்திய அரசு நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் 2019இல் மட்டும் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அடுத்த ஐந்தாண்டுகளில் என்ன நடக்கும் என்று கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் கற்பனை செய்து பார்க்கவும் மெய்ப்பட வேண்டுமென்றும் மனம் ஆவலாய் இருக்கிறது. ஒரு வேளை, 2019இல் பாஜக தோற்கடிக்கப்பட்டால் என்னால் மோடியை எதிர்க்கட்சி நாற்காலியில் அமர்ந்தவண்ணம் கற்பனை கூட செய்துப்பார்க்க முடியவில்லை. அதிகாரத்தின் உச்சிலேயே இருந்து பழகியவர் நாளை ஒரு நாள் ஒரே நாளில் அத்துணை அதிகாரமுமற்று சாதாரண மனிதனாக இன்று மன்மோகன் சிங் போல், அத்வானி போல், வாஜ்பாய் போல் மோடியை பார்க்க ஆவலாய் இருக்க, ஒரு நல்ல எதிர்க்கட்சித்தலைவராய் மோடி இருப்பாரா என்ற கேள்வி எனக்குள் எழ ஆரம்பித்துவிட்டது.

நிச்சயமாய் இன்னொரு முறையும் அவர்களே ஆட்சி அமைப்பர் என்று நானும் நம்பியே பயந்திருந்தேன். ஆனால் கடந்த சில வாரங்களாக எதுவும் அவர்கள் திட்டமிடுவது போல் நடக்காமல் மக்கள் கேள்வி கேட்கும் நிலைக்கு வந்தது கடும் பின்னடைவை ஆட்சியாளர்களுக்கு ஏற்படுத்தியுள்ளதை தெளிவாக உணர்த்துகிறது. ஊடகங்கள் மற்றும் சம்பளத்திற்கு சமூக வலைதளங்களில் வேலை செய்யும் கூட்டம் பாஜகவின் மிகப்பெரும் பலமாக அன்று முதல் இன்று வரை இருக்கிறது. இல்லையெனில் இன்று வரை ஒரு காங்கிரஸ் தலைவரும் சிறை செல்லாத நிலையில் ஊழல் ஊழல் என்று அன்று மக்களை நம்பவைத்திருக்க நிச்சயம் முடிந்திருக்காது. ஊழல் மற்றும் வளர்ச்சி என்ற இரண்டு சொற்களை வைத்தே வெற்றிபெற்ற நிலையில் அடுத்து வெற்றிபெற மதங்களுக்கிடையில் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தப்பட வாய்ப்பிருப்பதாய் உணருகிறேன். பொறுத்திருந்து பார்ப்போம். எப்படி மக்களை திசைத்திருப்புகிரார்கள், எப்படி கவனத்தை ஈர்க்கிறார்கள், எப்படி ஒரு செய்தியை மறக்கவும் எப்படி ஒரு செய்தியை மக்களை பேசவும் வைக்கிறார்கள், எப்படி எதிர்த்து பேசுபவர்களை கட்டுப்படுத்துகிறார்கள் என்பது பற்றி ஆதாரங்களுடன் மேலும் படிக்க: I Am A Troll, வாங்க: I Am A Troll.

இது எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு அரசியல் தோல்வி எனவும் பப்பு எனவும் சமூகவலைதளம் முழுதும் சித்தரிக்கப்படும் ஒருவர் அமெரிக்காவில் ஒரு பல்கலைக்கழகத்தில் பேசுகிறார் என்பதை மறைக்கவும் அவருக்கு பதிலடி கொடுக்கவும் 17 பேச்சாளர்களையும் 11 மத்திய அமைச்சர்களையும் 7 இணையமைச்சர்களையும் பல்வேறு தொலைக்காட்சிகளிலும் களமிறக்கியுள்ளது. எனினும் அவர் பப்பு எனவும் தோல்வியடைந்த அரசியல்வாதி எனவும் சித்தரிக்கப்படுகிறது. இது அச்சத்தையும், ஒரு தனி மனிதனை அரசியல் தேவைகளுக்காக எந்தளவுக்கு சித்தரிக்கப்படுவது இந்நாட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பதையும் காட்டுகிறது. உண்மையில் அவரின் பேச்சு எவ்வளவு அரசியல் முதிர்ச்சி உடையது என்பதை அந்த பேச்சை பார்த்தால் மட்டுமே தெரியும். ஆனால் மக்கள் அதை பார்க்க கூடாது என்பதற்காகவே இவ்வளவு அலப்பரைகள் எனில் ஆளும் வர்க்கம் எவ்வளவு ஆட்டம் காணுகிறது என்பதின் ஆழத்தையே இது காட்டுகிறது. மேலும் ராகுல் காந்தி எனும் ஒருவரை எப்படி பப்பு என சித்தரிப்பு நடக்கிறது, எந்தளவிற்கு இது நடக்கிறது, ஏன் நடக்கிறது என்பதை பற்றி அறிய: Why do we love to hate Rahul Gandhi. உண்மையில் ஒருவர் எவ்வளவு திறமையானவர், முதிர்ச்சியானவர் என்பது அவரின் செயல்பாடுகள் மற்றும் பேச்சுகளில் நாம் முடிவெடுக்க வேண்டுமே தவிர, நமக்கு எவ்வாறு பிம்பமாக்கப்படுகிறது என்பதை வைத்தல்ல. உண்மையில் நீங்கள் ராகுல் காந்தி என்பவர் எவ்வளவு தகுதியை கொண்டிருக்கிறார், இல்லை வெறும் பப்பு தானா என்று நேர்மையாகவும் கொள்கை சாய்வற்றும் முடிவெடுக்க விரும்பினால் படிக்க: Rahul Gandhi – pappu or illusionised pappu?!

இதைப்பற்றி மேலும் கூற நிறைய இருப்பினும் இந்த பதிவை திசைத்திருப்ப விரும்பவில்லை. காங்கிரசிற்கு வக்காலத்து வாங்க நான் காங்கிரஸ்காரனும் அல்ல. ஆனால் ஒவ்வொரு குடிமகனும் ஏன் தான் வாக்களிக்கும் முன் நன்கு யோசிக்க வேண்டும் என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் நன்று.

குறிப்பு: நான் இந்த அரசாங்க கொள்கைகளிலும் அக்கட்சி கொள்கைகளிலும் மாறுபாடான நம்பிக்கை உடையவனானாலும் இங்கே குறிப்பிடப்பட்ட கருத்துக்கள் யாவும் பல்வேறு இணையதளங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இதில் ஏதேனும் பிழையோ சரியின்மையோ இருந்தால் விமர்சனங்களை வரவேற்கிறேன். என்னுடைய கருத்துக்களை எதிர்கொள்ளாமல் என்னைப்பற்றியும் என்னுடைய நம்பிக்கைகள் பற்றியும் தனிப்பட்ட தாக்குகளை வழக்கம் போல் ஆரம்பித்தால் அது அவர்களால் இந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டக் கருத்துக்களை எதிர்கொள்ள இயலாமையையே காட்டும். நன்றி.

நன்றி: நரேன் ராஜகோபாலன்

படங்கள்: Gettyimages, Irony of India.

What do you feel about this?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s