உன்னைப் பணயம் கொள்ளும் இணையம் – பகுதி 4

முந்தைய பதிவில் செயற்கை நுண்ணறிவு எந்தளவிற்கு நம் வாழ்க்கையை மாற்றப்போகிறது என்பதன் முன்னோட்டத்தையும் அதற்கு நாம் எவ்வாறு சம்பளம் வாங்காமல் இரவும் பகலுமாக பணிபுரிந்துக் கொண்டிருக்கிறோம் என்பதையும் பார்த்தோம். இதற்கிடையில் சென்ற வாரம் ‘இரும்புத்திரை‘ என்ற திரைப்படம் வெளியானது. ‘உன்னைப் பணயம் கொள்ளும் இணையம்‘ தொடர் எதை வலியுறுத்தி எழுதத்தொடங்கினேனோ அதை அப்படியே எளிய முறையில் மக்களுக்கு புரியும் வகையில் அத்திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்த் திரைத்துறையில் இப்படி ஒரு படம் மிகுந்த வரவேற்பிற்குரியது. சில இடங்களில் எனக்குக் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், எவற்றையெல்லாம் செய்ய முடியும், அதற்கு எந்த வகையிலெல்லாம் நாம் துணை போகிறோம் என்பதை அப்பட்டமாக போட்டுடைத்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

மேலும், சென்ற வாரம் தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் இயக்கம் (Free Software Foundation Tamil Nadu – FSFTN) சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட சிறு கருத்தரங்கில் பங்குக் கொண்டேன். அதன் மூலம் பல்வேறு விவரங்கள், பார்வைகள், கோணங்கள் புதிதாகத் தெரிந்துக் கொள்ள முடிந்தது. முந்தைய பதிவில் கூறியவாறு தொழில்நுட்பம் அவ்வளவு அபார வளர்ச்சியை எட்டுவது நமக்கு நல்லது தானே, அதில் என்ன தவறு இருக்கிறது போன்ற கேள்விகள் எழுகின்றன. தொழில்நுட்பங்கள் எந்த அளவிற்கு வளர்ச்சியடைகிறது என்பதை விட அத்தொழில்நுட்பங்கள் யாருடைய கட்டுப்பாட்டில் வளர்கிறது, எதற்காக அவர்கள் அவ்வளவு மெனக்கெடுகிறார்கள் உள்ளிட்டவை முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும். Google, Uber, Nissan, Ford, Tesla, BMW என முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு சுயமாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு தானாகவே செல்லும் தானியங்கி வாகன தொழில்நுட்பத்திற்கான ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கான காரணம், பிற நிறுவனங்களுக்கு முன் தாங்கள் தான் அவற்றை அறிமுகப்படுத்தி அத்துறையில் அதிக பங்கீட்டை (Market share) பெற வேண்டும், பின்னாளில் அத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளை லாபம் பெறலாம் என்ற ஒரே நோக்கம் தான்.

ஒரு நிறுவனம் ஆராய்ச்சி மேற்கொண்டுத் தங்கள் துறையில் தாங்கள் முன்னணியில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள், நான் ஒரு நிறுவனத்தை நடத்தினாலும் அப்படித்தான் என் நோக்கமும் இருக்கும், இதிலென்ன தவறு இருக்கிறது என்ற கேள்விக்கு செல்வதற்கு முன், எவ்வாறு நம்முடைய தகவல்கள் நமக்கே தெரியாமல் பிற நிறுவனங்களின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதை சற்றே அலசுவோம். நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்ஃபோன்கள் நம்முடைய இருப்பிடத்தைக் கண்டறிய ஜிபிஎஸ்’ஐ பயன்படுத்துகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. நாம் ஜிபிஎஸ்’ஐ நிறுத்திவைக்கும் வசதியும் (turning off the location services) நம் ஸ்மார்ட்ஃபோன்களில் இருக்கிறது. ஆனால், ஜிபிஎஸ் நிறுத்திவைக்கப்பட்டிருந்தாலும் சரி, ஓர் ஸ்மார்ட்ஃபோன் உற்பத்தி செய்யப்பட்டதில் தொடங்கி அதை நாம் வாங்கிப் பயன்படுத்திவிட்டு, அதன் ஆயுட்காலம் முடிந்து முழுதும் பழுதடைந்து சுக்குநூறாய் உடைத்தெறியப்படும் வரை, நம்முடைய இருப்பிடத்தை ஒவ்வொரு நொடியும் நம் ஸ்மார்ட்ஃபோன்கள் Google/Apple நிறுவனங்களுக்கு அனுப்பிக்கொண்டிருக்கின்றன. ஆம், ஒவ்வொரு நொடியும்!

உண்மையை சொல்லப்போனால், நீங்கள் உங்கள் ஸ்மார்ட்ஃபோனை முற்றிலும் ஸ்விட்ச் ஆஃப் செய்து பேட்டரியை தனியாக எடுத்துவைத்தாலும் சரி தான், உங்கள் ஸ்மார்ட்ஃபோன் உங்கள் இருப்பிடத்தை நொடிக்கு நொடி சேகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. ஜிபிஎஸ்’ற்கென தனியாக சிறு IRC பேட்டரிகள் நம் ஸ்மார்ட்ஃபோன் மதர்போர்டில் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவை எந்நேரமும் இயங்கும் சக்தி கொண்டவை. நாம் நம் ஸ்மார்ட்ஃபோனில் இணைய இணைப்பை ஆரம்பித்த அடுத்த நொடியே அதுவரை சேகரித்த அனைத்து தகவல்களும் அந்நிறுவனங்களுக்கு அனுப்பப்படுகின்றன. இதன் மூலம் தான் தெருக்குத் தெரு, குறுக்குச்சந்துகள் உட்பட Google/Apple Maps’இல் நமக்கு வழிகள் காட்டப்படுகின்றன. எந்த சாலையில் எவ்வளவு வாகன நெரிசல்கள் இருக்கின்றன என்பதை அந்த வழியே செல்லும் வாகனங்களில் பயணிக்கும் ஸ்மார்ட்ஃபோன்கள் மூலம் கண்டறிந்து எவ்வழியில் சென்றால் விரைவாகச் செல்ல முடியும், எவ்வளவு நேரம் ஆகும் போன்றவற்றை Google/Apple செர்வர்கள் கணிக்கின்றன. அதையே மற்ற பயனாளர்களுக்கு நேரலையில் (Real timeஆக) வழங்கப்படுகின்றன.

ஸ்மார்ட்ஃபோன்கள் ஜிபிஎஸ்’ஐ நிறுத்திவைத்தாலும் நம் இருப்பிடத்தை சேகரிப்பது பற்றிய நூற்றுக்கணக்கான ஆதாரங்கள் இருக்கின்றன. சாதாரணமாக Google’இல் தேடினாலே கிடைக்கும். உண்மையில் நம் ஸ்மார்ட்ஃபோன்கள் பேட்டரியைக் கழட்டிவிட்டாலுமே கூட நம்மிடமிருந்து தகவல்களை சேகரிக்கும் வல்லமைப் படைத்த Google நிறுவனம் நம்முடைய இணைய இணைப்பிலிருந்தே நமக்கே தெரியாமல் நம் ஸ்மார்ட்ஃபோனில் இதுவரை நாம் எடுத்த படங்கள், காணொளிகள், நாம் பதிவிறக்கிய தரவுகள், பதிவேற்றம் செய்த தகவல்கள், நொடிக்கு நொடி நம் கேமராவில் நமக்கே தெரியாமல் நம்மையே படம் பிடித்த படங்கள், நாம் யாரிடம் பேசுகிறோம், என்ன பேசுகிறோம், எந்த செயலியில் என்ன தகவல் கொடுக்கிறோம், எங்கு என்ன கடவுச்சொல் பயன்படுத்துகிறோம் என நம்முடைய அத்துணை அந்தரங்கமும் Google நிறுவனத்திற்கு அத்துப்படி! நம்மைப்பற்றி நமக்கே தெரியாத தகவல்கள் கூட Google நிறுவனத்திற்குத் தெரியும் என்பதே அதிர்ச்சியான உண்மை! நாம் பதிவிறக்கும் செயலிகளுக்கு எந்தெந்த அனுமதிகள் (App Permissions) வழங்குகிறோம் என்பது வேண்டுமானால் நாம் தீர்மானிக்கலாம். ஆனால் யாருக்கு என்னென்ன அனுமதிகள் வழங்க வேண்டும் என்பவற்றை நாமே தீர்மானிக்கும் வகையில் அவ்வடிவமைப்பையே உருவாக்கிய Google நிறுவனத்திற்கு நாம் அனுமதிகள் வழங்கித்தான் நம் தரவுகள் கிடைக்கப்பெறும் என்று நினைக்கிறீர்களா? நாம் என்ன செய்தாலும் அனைத்து அனுமதிகளும் திரைக்குப் பின்னே அவர்களுக்கு இருந்துக்கொண்டு தான் இருக்கிறது. நாம் ஸ்மார்ட்ஃபோனை வாங்கிய போதே அத்துணை அனுமதிகளும் அவர்களுக்கு கொடுத்துவிடுகிறோம்!

உன்னைப் பணயம் கொள்ளும் இணையம்
என்பது உண்மையில்
உன்னையே கொள்ளும்/கொல்லும் இணையம்
தான்!

நாம் பயன்படுத்தும் செயலிகளுக்கு நாம் வழங்கும் அனுமதிகளே நம்மிடமிருந்து பல்வேறு தகவல் திருட்டிற்கு வழிவகுப்பது பெரும்பாலும் நமக்குத் தெரிவதில்லை. உதாரணத்திற்கு Paytm செயலிக்கு நாம் நம்முடைய ஸ்மார்ட்ஃபோனில் குறுஞ்செய்திகளை (SMS) படிப்பதற்கான அனுமதியை வழங்குகிறோம். அதன் மூலம் நமக்கு வரும் OTP எண்ணை நேரடியாக அந்த செயலியே கண்டறிந்து எடுத்துக்கொள்ளும் வசதி நமக்கு வழங்கப்படுவதால் அந்த அனுமதியை பெரும்பாலான செயலிகளுக்கு நாம் வழங்கி இருக்கிறோம். ஆனால், நமக்கு வரும் ஒவ்வொரு குறுஞ்செய்தியையும் அத்தகைய செயலிகள் படிக்கின்றன. நமக்கு வங்கி பரிமாற்றத்திற்கான செய்திகள் தொடங்கி பிற சேவைகளுக்கான OTP வரை அனைத்து செய்திகளும் அந்நிறுவனங்களுக்குச் செல்கின்றன. சொல்லப்போனால், அந்த செயலிகளால் நமக்கே தெரியாமல் நம் வங்கிக்கணக்கிலிருந்து இணையத்தில் எதற்கு வேண்டுமானால் OTP வரச்செய்து நமக்கே தெரியாமல் அந்த OTPஐ பயன்படுத்தி நம் வங்கிக்கணக்கிலிருந்து அனைத்து பணத்தையும் வழித்தெடுக்க முடியும்!

நாம் நம் ஸ்மார்ட்ஃபோனில் ஏதேனும் பழுதென்றால் அருகிலுள்ள சர்வீஸ் சென்டரில் கொடுக்கிறோம். அப்படி செய்வதால் நமக்கே தெரியாமல் சிறு செயலியை பதிவிறக்கம் செய்து நமக்கே தெரியாமல் நம்மைப் படம் பிடித்து இன்னொரு மூன்றாம் நபருக்கு தகவல்கள் தொடர்ச்சியாக அனுப்பும் வகையில் செய்து, சாதாரண செர்வீஸ் சென்டரில் பணிபுரிவோர் கூட தகவல் திருட முடியும்! ஏன், நீங்கள் உங்கள் ஸ்மார்ட்ஃபோனைப் பயன்படுத்திவிட்டு சில வருடங்கள் கழித்து பிறரிடம் விற்கிறீர்கள் என்றால் அந்த ஸ்மார்ட்ஃபோனை வைத்து நீங்கள் அந்த ஸ்மார்ட்ஃபோனை வாங்கியதிலிருந்து நீங்கள் நீக்கம் செய்த தரவுகள் உட்பட அனைத்தையும் எளிதாக மீட்டெடுக்க முடியும். Exchange offer என்ற பெயரில் நம்முடைய பழைய ஸ்மார்ட்ஃபோன்களை நம்மிடமிருந்து அதன் மதிப்பை விட அதிகமாக விலை கொடுத்து வாங்கிக்கொள்கிறார்களே எதற்காக? அதன் உதிரி பாகங்களை எடுத்து மீண்டும் உபயோகித்துக்கொள்ளத் தான் என்று நினைக்கிறீர்களா? காரணம் அதுவல்ல. நம்முடைய ஸ்மார்ட்ஃபோன் ஒரு தகவல் சுரங்கம், ஒவ்வொரு தனிமனிதனைப் பற்றியும் கோடிக்கணக்கான தகவல்களை தன்னிடத்தே தேக்கி வைத்திருக்கும் களஞ்சியம். அவற்றை சேகரித்து விற்று பணமாக்குகிறார்கள்.

எதற்காக?

தங்கம் போய், எண்ணெய் போய், நாளைய யுகம் தகவல்களால் ஆனது. தகவல்கள் தான் இனி தங்கம். தகவல்கள் தான் இனி எண்ணெயைவிட மதிப்பானது. அதை அதிகம் யார் தோண்டி எடுக்கிறார்களோ அவர்கள் தான் நாளைய தலைமுறையை ஆட்டிப்படைப்பர். அதற்குத்தான் Google, Apple, Facebook, Microsoft முதல் Reliance Jio வரை போட்டிப்போடுகின்றன. காரணம், கணினி மற்றும் இணைய யுகத்திற்கு முன் வரை Ford, Intel, Coca-Cola, Boeing, HP, General Electric, General Motors, Tata ஆகிய பெருநிறுவனங்கள் யாவும் ஏதேனும் பொருளைத்தான் உற்பத்தி செய்து, விற்று, பணம் சம்பாதித்தன. ஒரு கார் தயாரிக்க எவ்வளவு செலவு ஆனதோ இன்னொரு கார் தயாரிக்கவும் தோராயமாக அதே அளவிற்கு செலவு ஆனது. ஒரு தொலைப்பேசி நிறுவனம் தன் சேவையை ஒரு பயன்பாட்டாளருக்கு விற்க வேண்டுமென்றால் என்ன உட்கட்டமைப்புகளை ஏற்படுத்தவேண்டி இருந்ததோ, அதே அளவிற்கான உழைப்பும், செலவும் இன்னொரு பயனாளருக்கு சேவை வழங்கவும் தேவைப்பட்டது. ஒரு மூட்டை நெல்லைத் தயாரிக்கத் தேவையான அத்துணை உழைப்பையும் நூறு மூட்டை நெல் தயாரிக்கவும் செய்தாக வேண்டிய நிலை இருந்தது.

ஆனால் இணைய யுகம் அப்படி இல்லை. ஒரு நிறுவனம் இணையத்தில் ஒரு சேவையை வழங்குவதற்கான செயலியை உருவாக்கிவிட்டால் அச்சேவையை ஒரு நபருக்கு வழங்கினாலும் சரி ஒரு கோடி நபருக்கு வழங்கினாலும் சரி, ஆகப்போகிற செலவு சற்றேறக்குறைய ஒன்று தான். Facebook, YouTube, WhatsApp, Instagram என எந்த சேவையை எடுத்துக்கொண்டாலும் அச்சேவையை அறிமுகப்படுத்தி நிறுவிவிட்டால் (establishing the business) அச்சேவை ஒரு லட்சம் பயனாளர்கள் என்ற நிலையிலிருந்து நூறு கோடி பயனாளர் என்ற நிலைக்கு எடுத்துச்செல்ல விளம்பர செலவுகள் தவிர்த்துக் கூடுதலாக செலவு ஏதும் இருக்கப்போவதில்லை. (ஒரு சேவைக்குத் தேவையான உட்கட்டமைப்புகள், பராமரிப்புகள் போன்றவை அச்சேவையினால் கிடைக்கும் பலனைக்காட்டிலும் மிகவும் சொற்பமானது.)

If I need to sell one mango to thousand people, I have to produce/procure thousand mangoes. If I need to sell one digital service to thousand people, I don’t need to produce thousand digital services. I can simply send the link/app to my digital service to thousand people and let them use my service, with literally no extra cost in my side!

வெறும் 12,000 ஊழியர்களைக்கொண்ட Uber நிறுவனத்தின் சந்தை மதிப்பு 72 பில்லியன் டாலராக இருப்பதும் SoftBank, சவூதி அரேபிய அரசு என பலரும் போட்டி போட்டுக்கொண்டுக் கோடிக்கணக்கில் Uber’இல் மென்மேலும் முதலீடு செய்வதும் இதற்காகத்தான். 46 நாடுகளில் சுமார் 4 லட்சம் ஊழியர்களைக்கொண்டு இயங்கும் இந்தியாவின் மிகப்பெரும் நிறுவனமான TCS, சந்தைமதிப்பில் இந்தியாவின் முதல் நூறு பில்லியன் டாலர் (100 billion USD) நிறுவனமாக ஆனதாக சில வாரங்களுக்கு முன் செய்திகளில் நாம் படித்தோம். ஆனால் வெறும் 50 ஊழியர்களை மட்டுமே கொண்ட WhatsApp நிறுவனத்தை Facebook நிறுவனம் 19 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ஒரு லட்சத்து இருபதாயிரம் கோடி ரூபாய்) கொடுத்து வாங்கியது. காரணம் நான் மேற்கூறியவை தான். ஒரு சேவையை பிறருக்கு முன் நிறுவி சந்தைப்படுத்திவிட்டால்  (establishing a business) அதே சேவையை அதை விட சிறப்பாக எவர் கொடுத்தாலும் சரி, முதலில் கொடுத்தவரை முந்துதல் இங்கு மிகக்கடினம்.

உதாரணம், WhatsAppஐ விட பல வசதிகளைக் கொண்டதாக Telegram இருப்பினும் முதலில் வந்து சந்தைப்படுத்திவிட்டக் காரணத்தால் WhatsAppஐ எவரும் முந்தமுடியவில்லை. எனவே தான் WhatsApp’இன் மதிப்பு பல்லாயிரம் கோடிகளானது. பல கோடி பயனாளர்களைக்கொண்ட WhatsAppஐ போட்டி போட்டு முந்துவதை விட பல்லாயிரம் கோடி கொடுத்து அந்நிறுவனத்தையே வாங்கிக்கொள்வது சிறந்ததெனக் கருதி Facebook நிறுவனம் WhatsAppஐ 19 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கியது. விளம்பரம் கூட போடாத ஒரு சேவையை அத்துணை பயனாளர்களுக்கும் தங்குத்தடையின்றி வழங்கத்தேவையான கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு செலவுகளுக்குக்கூட நேரடி வருமானமே வராத ஓர் சேவையை எதற்காக அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டும்! ஒரே காரணம் தான். அவ்வளவு பயனாளர்களின் அவ்வளவு தகவல்கள் விளம்பர வருமானங்களைவிடவும் அதிக மகத்தானவை. காலத்தால் அழியாத தொடர் பலன்களை அளித்துக்கொண்டே இருக்கப்போகிறவை.

இணையத்தின் இப்படியான ஓர் அங்கத்தின் காரணமாகத்தான் ரிலையன்ஸ் நிறுவனம் ஒன்னரை லட்சம் கோடி முதலீட்டில் Jio நிறுவனத்தைத் தொடங்கி அனைவருக்கும் இலவச அதிவேக இணைய சேவை வழங்கியது. நாடு முழுதும் இலவச அதிவேக 4G இணைய சேவையை வழங்கி ஏற்படுத்திய தாக்கத்தை விடவும் கண்ணாடி இழை தொழில்நுட்பம் மூலம் அந்நிறுவனம் ஏற்படுத்தப்போகும் தாக்கம் மிக அதிகம். ஆனால் Jio நிறுவனத்தின் செயல்திட்டங்கள் பாதியளவுக் கூட இன்னும் செயல்படுத்தப்படவில்லை என்று தான் கூட வேண்டும்.

Jio is yet to unleash it’s full potential! It isn’t merely a telecom company. It’s a digital ecosystem intended to control entire digital market, with target fields including Internet of Things, Artificial Intelligence, Machine Learning, Data Mining and Cloud Computing, Media Services, Payment Services, etc.

Jio நிறுவனத்தைப் பற்றி மேலும் பேசுவதற்கு முன் Jio’வின் முன்னோடியான Googleஐப் பற்றி விரிவாகப் பேசினால் Jio உட்பட பெரும்பாலான இணைய நிறுவனங்களின் மூலோபாயம் என்ன என்பதைத் தெளிவாக விளங்க முடியும். இணையம் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது Google தான். எந்த அளவிற்கு Google நிறுவனம் நம் வாழ்வை கையடக்கத்தில் வைத்திருக்கிறது என்பதைப்பற்றி அடுத்த பகுதி முழுதும் அலசுவோம்!

இக்கட்டுரை உங்களுக்குப் பயனுள்ளதாய் அமைந்திருந்தால் நண்பர்களிடம் பகிரவும். மேலும் உங்கள் கருத்துக்களைக் கீழே பதிவிடவும். நன்றி.

முகப்புப் படம்: pixabay.com

இக்கட்டுரைத்தொடரின் முந்தைய/அடுத்த பகுதிகளைப் படிக்க:

உன்னைப் பணயம் கொள்ளும் இணையம்!

What do you feel about this?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s