காங்கிரஸ் vs பாஜக – ஒரு பொருளாதார மதிப்பீடு!

தற்போதைய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மற்றும் கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆகிய இரண்டு ஆட்சிகளின் செயல்பாடு, சாதனைகள், போக்கு முதலியவற்றைப் பொருளாதார ரீதியாக மதிப்பிடும் ஒரு விரிவான அலசல் கட்டுரை.

இந்த மதிப்பீட்டிற்கு பெரும்பாலும் அரசின் புள்ளிவிவரங்கள் மற்றும் ஆண்டு ஆய்வறிக்கைகளே பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இரண்டு ஆட்சிகளிலும் நிலவிய ஆண்டு வளர்ச்சி விகிதங்கள், ஒவ்வொரு ஆண்டிற்கான புள்ளிவிவரங்கள் முதற்கொண்டு நியாயமான மதிப்பீட்டுக் கருவிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதைப் படிப்பதற்கு முன், சில குறிப்புகளை கணக்கில் கொள்ள வேண்டியிருக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி பெரும்பான்மையற்ற கூட்டணி ஆட்சி. ஆனால் மோடி தலைமையிலான ஆட்சி பாஜக தனிப்பெரும்பான்மையை பெற்ற ஆட்சி. மேலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது உலகப் பொருளாதார வீழ்ச்சி, மந்தநிலை, கச்சா எண்ணெய் விலை $140+ போன்ற பல்வேறு சிக்கல்கள் நிலவின. மோடி தலைமையிலான ஆட்சியில் அதிஷ்டவசமாக கச்சா எண்ணெய் விலை 40 அமெரிக்க டாலர்கள் வரை குறைந்தும், உலகப் பொருளாதாரம் வளரும் தருவாயிலுமே நிலவி வருகிறது.

 1. ஜிடிபி (Gross Domestic Product – GDP):

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் (2004-14) இந்தியப் பொருளாதாரம் ஆண்டிற்கு 8.1% வளர்ச்சியடைந்தது. மோடி ஆட்சியில் (2014-18) நம் பொருளாதாரம் 7.3% வளர்ச்சியடைந்துள்ளது.

மேலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 2013ஆம் ஆண்டு இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்தது (PPP).

 இந்த புள்ளிவிவரங்கள் இந்திய அரசின் புள்ளியியல் துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் 2018ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கீழ்க்கண்ட இணைப்பில் வெளியிடப்பட்டிருந்தது. http://mospi.nic.in/sites/default/files/publication_reports/Report_committee_real_sector_statistics_25july18.pdf

 ஆனால் இந்த விவரங்களை மறைக்க தற்போது அந்த ஆய்வறிக்கை அரசின் இணையதளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

 ஆனால் அந்த ஆய்வறிக்கையின் நகல் கீழுள்ள இணைப்பில் நீங்கள் தரவிறக்கம் செய்து படிக்கலாம் (பக்கம் எண்: 145):

http://s000.tinyupload.com/?file_id=01323013059347049289

 இதன்படி இந்திய வரலாற்றில் உச்சபட்சமாக 10.8% பொருளாதார வளர்ச்சியைத் தொட்டது 2010-11 நிதியாண்டில் என்பது குறிப்பிடத்தக்கது.

  photo6156557812197599409

மேலும் இந்திய அரசு வளர்ச்சி விகிதங்கள் குறித்த புள்ளிவிவரங்களில் மாற்றம் செய்வதாக சர்வதேச அளவில் பல்வேறு குற்றச்சாட்டுகளும் எழுகின்றன.

ஆதாரம்: https://www.cnbctv18.com/economy/imfs-gita-gopinath-says-india-must-transparently-communicated-growth-statistics-2897611.htm/

 

2. ஏற்றுமதி (Exports):

மன்மோகன் சிங் பிரதமராக இருந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சி விகிதம் ஆண்டிற்கு சராசரியாக 17.24% ஆக இருந்தது. இதுவே மோடியின் ஆட்சியில் சராசரியாக ஆண்டிற்கு 0.81% வீழ்ச்சியடைந்துள்ளது.

 ஆதாரம்: https://commerce-app.gov.in/eidb/

  

3. அந்நிய நேரடி முதலீடு (Foreign Direct Investment – FDI):

மோடி தலைமையிலான ஆட்சியில் மேக் இன் இந்தியா திட்டம் மூலமாகவும் மோடியின் பல்வேறு வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் மூலமும் இந்தியாவிற்கு வெளிநாடுகளிலிருந்து பெரும் அந்நிய நேரடி முதலீடுகள் குவிந்திருப்பதாக இந்த அரசும் ஊடகங்களும் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் புள்ளிவிவரங்கள் வேறு உண்மையைக் கூறுகின்றன.

 காங்கிரஸ் ஆட்சியில் ஆண்டிற்கு 23.68% ஆக இருந்த அந்நிய நேரடி முதலீடுகளின் வளர்ச்சி, மோடி ஆட்சியில் ஆண்டிற்கு 11.51% மட்டுமே வளர்ந்திருக்கிறது. 2003-04இல் $4.3 பில்லியன்களாக இருந்த இந்தியாவின் அந்நிய நேரடி முதலீடு 2013-14இல் $36 பில்லியன்களாக உயர்ந்திருந்து, தற்போது 2018-19ஆம் நிதியாண்டில் $62.5 பில்லியன்களாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

 ஆதாரம்: https://dipp.gov.in/sites/default/files/FDI_Factsheet_12March2019.pdf

  

4. தொழில் உற்பத்திக் குறியீடு (Index of Industrial Production – IIP):

தொழில் உற்பத்திக் குறியீடு என்பது இந்தியாவின் மொத்த உற்பத்தியில் மின்சாரம், சுரங்க மற்றும் தொழில் உற்பத்தி முதலிய துறை சார்ந்த உற்பத்தியின் விகிதத்திற்கான அளவுகோலாகும். நாட்டின் தொழில் வளர்ச்சியின் ஒரு முக்கிய அளவுகோலாக இக்குறியீடு பார்க்கப்படுகிறது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் சராசரியாக 7.3% ஆக இருந்த தொழில் உற்பத்திக் குறியீட்டின் வளர்ச்சி மோடி ஆட்சியில் 4.45% ஆக உள்ளது.

 ஆதாரங்கள்:

  

5. அந்நியச் செலாவணிக் கையிருப்பு (Foreign Exchange Reserves):

கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ஆண்டிற்கு 10.3% ஆக இருந்த  ரிசர்வ் வங்கியின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு தற்போது பாஜக ஆட்சியில் ஆண்டிற்கு 5.6% ஆகக் குறைந்துள்ளது.

 ஆதாரம்: https://www.rbi.org.in/Scripts/WSSViewDetail.aspx

  

6. சென்செக்ஸ் வளர்ச்சி (Sensex):

பங்குச்சந்தைகள் ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சியிக்கான நேரடிக் குறியீடாகும். பங்குச்சந்தையின் வளர்ச்சி அந்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கான சாட்சியாகவே பார்க்கப்படுகிறது.

 மும்பை பங்குச்சந்தைக் குறியீடான சென்செக்ஸ் கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணிஆட்சியின் பத்தாண்டுகளில் ஆண்டிற்கு சராசரியாக 18.36% வளர்ந்திருந்தது. தற்போது கடந்த ஐந்தாண்டுகளில் சென்செக்ஸ் வளர்ச்சி ஆண்டிற்கு சராசரியாக 9.63% ஆக உள்ளது.

 ஆதாரம்: http://www.bseindia.com/indices/IndexArchiveData.aspx

  

7. அமெரிக்க டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு ($ Vs ₹):

1998இல் வாஜ்பாய் பிரதமராக ஆன போது இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு அமெரிக்க டாலருக்கு 39.5 ரூபாயாக இருந்தது. 2004இல் வாஜ்பாய் பதவி விலகிய போது ஒரு அமெரிக்க டாலருக்கு 45.3 ரூபாயாக இருந்தது. வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசின் ஆறு ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு 2.3% இந்திய ரூபாய்க்கு எதிரான அமெரிக்க ரூபாயின் மதிப்பு உயர்ந்திருந்நது.

 2004இல் மன்மோகன் சிங் பிரதமராக பொறுப்பேற்கும் போது 45.3 ரூபாயாக இருந்த ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு 2014இல் காங்கிரஸ் ஆட்சியிழந்த போது 58.5 ரூபாயாக இருந்தது. பத்தாண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு 2.59% உயர்வடைந்தது.

 2013-14 ஆண்டுகளில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை பெரிதளவில் அரசியலாக்கிய மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற போது 58.5 ரூபாயாக இருந்த ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு தற்போது 69.18 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த ஐந்தாண்டு மோடி ஆட்சியில் ஆண்டிற்கு சராசரியாக 3.41% வீழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

  

8. மின்மயமாக்கப்பட்ட கிராமங்கள்:

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் பத்தாண்டுகளில் 1,08,280 கிராமங்கள் மின்மயமாக்கப்பட்டன. தற்போதைய பாஜக ஆட்சியின் நான்காண்டுகளில் 18600 கிராமங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளன.

 ஆதாரம்: http://recindia.nic.in/download/ar2014-15/ar2014-15.pdf (பக்கம் 4)

  

9. வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்குதல்: 

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் பத்தாண்டுகளில் 2.16 கோடி மின் இணைப்புகள் வழங்கப்பட்டன (ஆண்டுக்கு 21.68 லட்சம் இணைப்புகள்). இது கடந்த நான்காண்டுகளில் 88.26 லட்சம் இணைப்புகளாக உள்ளன (ஆண்டுக்கு 22.06 லட்சம்). தோராயமாக ஒரே விகிதம் தான் இரண்டு கூட்டணி ஆட்சிகளிலும்.

 ஆதாரம்: https://www.recindia.nic.in/uploads/files/ar2017-18.pdf (பக்கம் 4)

  

10. கிராமப்புற வீடுகள் கட்டுமானம்:

மோடி எங்கு சென்றாலும் தன்னுடைய ஆட்சியில் ஒரு கோடி கிராமப்புற வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்றும் காங்கிரஸ் நாட்டிற்கு எதுவுமே செய்யவில்லை என்று கூறி வருகிறார்.

 ஆனால் 2008-13 வரையிலான ஐந்தாண்டுகளில் காங்கிரஸ் தலைமையிலான அரசு இந்திரா காந்தி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 1.28 கோடி வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டதாக சிஏஜியின் தணிக்கை அறிக்கை கூறுகிறது. கடந்த ஐந்தாண்டுகளில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மோடி அரசு கட்டிக் கொடுத்த வீடுகளின் எண்ணிக்கை 1.01 கோடிகள்.

 ஆதாரங்கள்:

  

11. வருமான வரி வருவாய் வளர்ச்சி விகிதம்:

பாஜகவும் மோடியும் வருமான வரி வருவாய் வளர்ச்சி பற்றியும் பணமதிப்பிழப்பு பற்றியும் தவறான செய்திகளையே பரப்பி வருகின்றனர். உண்மை இதுவே:

 காங்கிரஸ் தலைமையிலான கடந்த பத்தாண்டு ஆட்சியில் வருமான வரி வருவாய் வளர்ச்சி ஆண்டுக்கு 19.36% ஆக இருந்தது. அது மோடி தலைமையிலான கடந்த நான்காண்டு ஆட்சியில் ஆண்டுக்கு 14.67% ஆக உள்ளது.

 ஆதாரம்: https://www.incometaxindia.gov.in/Documents/Direct%20Tax%20Data/time-series-data-2017-18.pdf

 

 12. தொழில் வரி வருவாய் வளர்ச்சி:

தொழில் வரி வருவாய் ஒரு நாட்டின் தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகளைக் குறிக்கிறது. தொழில் நிறுவனங்கள் அதிக வளர்ச்சியை எட்டினால் அதிக லாபமடையும், அதுவே அரசின் தொழில் வருவாயை அதிகரிக்கும்.

 காங்கிரஸ் தலைமையிலான கடந்த பத்தாண்டு ஆட்சியில் தொழில் வரி வருவாய் வளர்ச்சி ஆண்டுக்கு 20.03% ஆகவும், தற்போதைய மோடி ஆட்சியில் அதுவே 9.68% ஆகவும் இருக்கிறது.

 ஆதாரம்: https://www.incometaxindia.gov.in/Documents/Direct%20Tax%20Data/time-series-data-2017-18.pdf

 

13. வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்குதல்:

ஏழைகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்குவது இந்த அரசின் சாதனையாக அதிகம் பேசப்படுகிறது. ஆனால் புள்ளிவிவரங்கள் இதைப் பொய்யாக்கின்றன.

 2009 ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு சமையல் எரிவாயு இணைப்பு பெற்ற குடும்பங்களின் விகிதத்தை 50%இலிருந்து 2015ஆம் ஆண்டிற்குள் 70% ஆக உயர்த்த வருமைக்கோட்டின் கீழுள்ள குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் ராஜிவ்காந்தி கிராமின் வித்ரான் யோஜனா என்ற திட்டத்தைக் கொண்டு வந்தது. 2014 அக்டோபர் நிலவரப்படி இத்திட்டத்தின் கீழ் 6.69 கோடி புதிய சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டு சமையல் எரிவாயு இணைப்பு பெற்ற குடும்பங்களின் விகிதம் 66.5% ஆக உயர்ந்தது.

 மோடி ஆட்சிக்கு வந்ததும் இத்திட்டம் நிறுத்தப்பட்டு 2016ஆம் ஆண்டு பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா என்று பெயர் மாற்றப்பட்டு மூன்று வருடத்தில் 5 கோடி புதிய சமையல் எரிவாயு இணைப்புகள் வருமைக்கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களுக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பிப்ரவரி 2018 நிலவரப்படி 3.38 கோடி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் விதையூன்றப்பட்ட இத்திட்டத்தின் செயலாக்க விகிதமும் முந்தைய அரசின் சொயலாக்கத்தை ஒத்தே இருக்கிறது.

 ஆதாரங்கள்:

 

 14. நேரடி மானிய வினியோகம் (Direct Benefit Transfer):

ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குக்கு நேரடியாக மானியம் சென்றடையும் வகையில் நேரடி மானிய வினியோகத் திட்டத்தைக் கொண்டு வந்ததாக மோடி அரசு பெருமையாக சிலாகித்துக் கொண்டது. உண்மையில் நேரடி மானிய வினியோகத்திட்டத்திற்கு முதலடி எடுத்துவைத்தது காங்கிரஸ் அரசே! ஜூன் 2013ஆம் ஆண்டு 18 மாவட்டங்களில் முன்னோட்டமாக நேரடி மானிய வினியோகத்தை அறிமுகப்படுத்தியது மன்மோகன் சிங் அரசு. ஜனவரி 2014இல் அத்திட்டம் 291 மாவட்டங்களுக்கு விரிவுப்படுத்தப்பட்டு 2.8 கோடி பயனாளிகளுக்கு நேரடியாக மானியம் வினியோகிக்கப்பட்டது. மோடி பிரதமரான பிறகு காங்கிரஸ் அரசின் திட்டத்தை தொடர்ந்து நாடு முழுதும் விரிவுப்படுத்தி தானே கொண்டுவந்தது போல் பிரச்சாரம் செய்தார்.

 ஆதாரம்: http://petroleum.nic.in/sites/default/files/AR13-14.pdf (பக்கம் 76)

  

15. ஆதார் மூலம் போலி கணக்குகளை நீக்குதல்:

ஆதார் அடையாள அட்டையுடன் பல்வேறு மானியங்களைப்‌ பெறும் போலி கணக்குகளை நீக்குவதற்கான நடவடிக்கையை 2013ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு மேற்கொண்டது. இதன் மூலம் 2014ஆம் ஆண்டிற்கு முன்னரே 87 லட்சம் போலியான கணக்குகள் நீக்கப்பட்டு 2870 கோடி ரூபாய் அரசிற்கு மிச்சம் செய்யப்பட்டது. மோடி பதவியேற்றதும் இத்திட்டத்தைத் தொடர்ந்து, தானே கொண்டுவந்தது போல் விளம்பரம் செய்துக் கொண்டார்.

 ஆதாரம்: http://petroleum.nic.in/sites/default/files/AR13-14.pdf (பக்கம் 76)

  

16. கிராமப்புற சாலைகள் அமைத்தல்:

கிராமப்புற சாலைகள் அமைப்பதற்கான பிரதான் மந்திரி கிராமின் சடக் யோஜனா திட்டத்தின் மூலம் 2005-17 வரை அமைக்கப்பட்ட சாலைகள் குறித்த புள்ளிவிவரங்கள் நம்மிடம் உள்ளன. 2005-14 வரையிலான காலகட்டத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசு 3,32,935 கிலோமீட்டர்கள் நீளத்திற்கு கிராமப்புற சாலைகள் கட்டமைத்தது. வருடத்திற்கு 36,992 கிலோமீட்டர்கள், நாளொன்றுக்கு 109.7 கிலோமீட்டர்கள் வரையிலும் அமைக்கப்பட்டன. 2014-17 வரையிலான காலகட்டத்தில் மோடி அரசு 1,20,136 கிலோமீட்டர்கள் நீளத்திற்கு கிராமப்புற சாலைகள் கட்டமைத்து. வருடத்திற்கு 40,045 கிலோமீட்டர்களும் நாளொன்றுக்கு 109.7 கிலோமீட்டர்களும் அமைக்கப்பட்டன. நிதின் கட்காரி அவர்கள் சாதனையாக விளம்பரம் செய்யும் அளவிற்கு பெரிய வளர்ச்சியல்ல.

 ஆதாரம்:

  

17. வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் வரத்து:

வெளிநாட்டு சுற்றுப்பயணிகளின் வரத்து நம் நாட்டில் 2003-04இல் 27.24 லட்சமாக இருந்தது. இது 2013-14இல் 69.67 லட்சமாகவும் 2017-18இல் 100.18 லட்சமாகவும் உயர்ந்தது. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இதன் வளர்ச்சி விகிதம் 9.84% ஆகவும் கடந்த நான்காண்டு மோடி ஆட்சியில் 9.5% ஆகவும் இருக்கிறது.

 ஆதாரம்:

 

 18. ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத் தாக்குதல்:

2008ஆம் ஆண்டிற்கு முன் ஆயிரத்திற்கும் மேற்பட்டதாக இருந்த ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்களின் எண்ணிக்கை 2013-14இல் 222 ஆகக் குறைக்கப்பட்டது. இது மீண்டும் 2018இல் 614 தீவிரவாத தாக்குதல்கள் அளவிற்கு உயர்ந்துள்ளது. 2014-18 இடைப்பட்ட நான்காண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 35.71% உயர்ந்துள்ளது; இதே காலகட்டத்தில் கொல்லப்பட்ட பாதுகாப்பு வீரர்களின் எண்ணிக்கை 93% உயர்ந்துள்ளது.

 ஆதாரம்: https://www.indiatoday.in/amp/india/story/pulwama-terror-attack-jammu-kashmir-terrorism-data-last-5-years-soldiers-killed-1456427-2019-02-14

  

19. பாதுகாப்பு வீரர்களின் மரணங்கள்:

2005இல் கொல்லப்பட்ட பாதுகாப்பு வீரர்களின் எண்ணிக்கை 342ஆகவும் 2006இல் 223, 2007இல் 221 என படிப்படியாக குறைந்து 2013இல் 64 ஆக இருந்தது.

தற்போது மீண்டும் 2018இல் பாதுகாப்பு வீரர்களின் கொலை எண்ணிக்கை நூறைத் தாண்டியது. 2019ஆம் ஆண்டிலேயே இதுவரை 90 பாதுகாப்பு வீரர்கள் வீரமரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

 ஆதாரம்: https://timesofindia.indiatimes.com/india/every-third-day-1-soldier-of-indian-army-killed-in-line-of-duty-for-last-13-years/articleshow/62511387.cms

  

20. தீவிரவாத இயக்கங்களில் இணையும் இளைஞர்கள்:

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் காஷ்மீர் அமைதியாகவே இருந்திருக்கிறது. 2013இல் வெறும் 16 பேர் மட்டுமே தீவிரவாத இயக்கங்களில் இணைந்திருந்த நிலையில் தற்போது 2018இல் 191 ஆக இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

2010 – 54

2011 – 23

2012 – 21

2013- 16

2014 – 53

2015 – 66

2016 – 88

2017 – 126

2018 – 191

ஆதாரம்: https://economictimes.indiatimes.com/news/defence/191-kashmiri-youths-joined-militancy-in-2018-official/articleshow/67835737.cms

  

21. வேலைவாய்ப்பின்மை:

வேலைவாய்ப்பின்மை கடந்த 45 வருடங்களின் உச்சத்தில் இருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. மேலும் ஆண்டிற்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்ற வாக்குறுதியை அளித்து ஆட்சியைப் பிடித்த மோடி அரசு வேலைவாய்ப்பின்மையை கட்டுப்படுத்தத் தவறியதோடு ஒவ்வொரு ஆண்டும் அரசு வெளியிடும் பல்வேறு புள்ளிவிவரங்களை வெளியிடாமல் முடக்கி வைத்துள்ளது.

 ஆதாரம்: https://www.hindustantimes.com/india-news/india-s-unemployment-rate-hit-45-year-high-in-2017-18-report/story-1MYf1tFZ0thkz1UGfKp1BP.html

  

22. பெண்கள் வாழ தகுதியற்ற நாடு:

இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடாக இடம்பெற்றுள்ளது. பெண்களுக்கெதிரான குற்றங்கள் 83% உயர்ந்துள்ள நிலையில் பெண்களுக்கெதிரான குற்றச்செயல்களுக்கான தண்டனை வழங்குதல் விகிதம் பத்தாண்டுகளிலேயே குறைவான அளவை எட்டியுள்ளது.

 ஆதாரம்:

  

23. புதிய முதலீடுகள்:

நாட்டில் புதிய முதலீடுகள் கடந்த 14 வருடங்களிலேயே குறைவான அளவில் உள்ளது.

 ஆதாரம்: https://www.livemint.com/Politics/djaa4hxQTklGR3lOws8hzJ/New-investments-in-India-plunge-to-14yearlow.html

  

24. பசிக் குறியீடு (Hunger Index):

பசியைக் கணக்கிடும் குறியீட்டின் படி 119 நாடுகளில் இந்தியா 103ஆம் இடத்தில் உள்ளது.

 ஆதாரம்: https://economictimes.indiatimes.com/news/economy/indicators/india-ranks-103-on-global-hunger-index/articleshow/66226877.cms

  

25. நாட்டின் கடன் அளவு:

2014ஆம் ஆண்டில் 54.9 லட்சம் கோடி ரூபாயாக இருந்த இந்தியாவின் கடன் அளவு தற்போது 82 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஐந்தாண்டு மோடி ஆட்சியில் மட்டும் இந்தியாவின் கடன் 50% உயர்ந்திருக்கிறது.

 ஆதாரம்: https://economictimes.indiatimes.com/news/economy/finance/indias-debt-up-50-to-rs-82-lakh-crore-in-modi-era/articleshow/67593687.cms

 

 உண்மையில் கடந்த ஐந்தாண்டுகளில் மோடி அரசு எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை என்பதே உண்மை (இத்தனைக்கும் மோடி பெற்றது பெரும்பான்மை அரசு). மோடி ஆட்சியில் கச்சா எண்ணெய் விலை மிக்க குறைவானதால் அரசிற்கு 150 பில்லியன் டாலர்கள் வரை மிச்சமடைந்துமின்றி பணவீக்கம் கட்டுப்பாட்டிற்குள்ளே இருக்க பெரும் பலனாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்க வகையில் காங்கிரஸ் அரசைக் காட்டிலும் எந்த வகையிலும் மோடி அரசு முன்னேற்றத்தை வழங்கவில்லை என்பதே நிதர்சனம். ஆனால் பெரும்பாலான ஊடகங்கள் இத்தகைய புள்ளிவிவரங்களை மறைத்தும், முக்கியத்துவம் கொடுக்காமலுமே இருக்கின்றன.

இக்கட்டுரையில் பட்டியலிடப்பட்டுள்ளன பெரும்பாலான தகவல்கள் Drunk Journalist என்ற முகநூல் பக்கத்தின் பதிவுகளிலிருந்து அதன் அட்மினின் அனுமதிப் பெற்று தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து புள்ளிவிவரங்களும் பொது பயன்பாட்டிற்கான மூலங்களிலிருந்தே (public domain) எடுக்கப்பட்டுள்ளது.

இக்கட்டுரை போலியான வளர்ச்சி, உஜ்வாலா யோஜனா, ஆவாஸ் யோஜனா, ஜிடிபி, எஃப்டிஐ என‌பல்வேறு பொய்ப்பிரச்சாரரங்களை நொறுக்குகிறது. மக்களுக்கு இந்த உண்மைகள் சென்றடையும் வகையில் இக்கட்டுரையை முகநூல், ட்விட்டர், வாட்சாப் என அனைத்து சமூக ஊடகங்களிலும் பகிருங்கள். மக்கள் தங்கள் வாக்குகளை செலுத்தும் முன் இவற்றைத் தெரிந்துக் கொள்ளுதல் அவசியம்.

நன்றி: Drunk Journalist

முகப்புப் படம்: India.com

 

What do you feel about this?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s