பாரத் மாதா கி ஜே – ஒரு பக்தாளுடன் ஒரு சாமானியனின் உரையாடல்

சாமானியன்: வெளிநாட்டு நிதி வாங்கக் கூடாதுனா என்னத்துக்கு மோடி நாடு நாடா போய் எல்லாரையும் கட்டிப்புடிச்சிட்டு வராரு?

பக்தாள்: நாடு நாடா போறது FDI’க்காக சகோ. வெளிநாட்டு கம்பெனிங்க நம்ம நாட்டுல வந்து முதலீடு பண்ணி நம்ம நாடு வளர்ச்சி அடைறதுக்காக சகோ. Make in India கேள்விப்பட்டதில்ல?

சாமானியன்: அது சரி, அதுக்கு வெளிநாட்டு அரசாங்கம் பண்ற உதவிய ஏன் வேணாங்கணும்? ஒலக நாடுக்கெல்லாம் ஓடி ஓடி போய் முதலீடு பண்ணுங்க பண்ணுங்க னு கேட்டுட்டு இப்போ ஒலக நாடுங்க கேரளத்துக்கு தர்ற நிவாரண நிதிய வாங்க முடியாதுனு சொன்னா என்ன அர்த்தம்? அயல்நாட்லேந்து உயிர கொல்ற ஆயுதம்லாம் வாங்கலாம், ஆனா உசுர காப்பாத்த நன்கொடை வாங்க கூடாதுன்னா என்ன அர்த்தம்? அப்டி சொன்னா இந்நேரம் தேவைப்படுற அமௌண்ட்ட நீங்களே குடுத்துருக்கணும். அவங்க என்ன உங்கக்கிட்ட பிச்சையா கேக்குறாங்க? எல்லா வரி வருமானமும் நேரா மத்திய அரசுக்கு தான் போறமாரி ஜிஎஸ்டி கொண்டுவந்தீங்க… இப்போ அவங்க கட்டுன வரிப்பணத்துலேந்து நிவாரணம் கேட்டா அவ்ளோ இழுத்தடிக்குறீங்க…. தானும் செய்ய மாட்டீங்க, செய்றவங்களயும் விடமாட்டீங்க…. வரி வருமானம் பூராவும் சென்ட்ரலுக்கு ஜிஎஸ்டியா போறமாறி பண்ணிட்டு உங்க கட்சி ஆளுற மாநிலம்னா ஒரு மாறியும் மத்த கட்சி ஆளுற மாநிலம்னா ஒரு மாறியும் நிதி ஒதுக்க வேண்டியது… எலக்சன் வந்தா போதும், உடனே அதிகாரத்த பயன்படுத்தி தேர்தல் நடத்தை விதிகள மீறி ஜிஎஸ்டி வரி விகிதத்த மாத்தி ஓட்டு கேக்க வேண்டியது…

பக்தாள்: காங்கிரஸ் ஆட்சிலே வெளிநாட்டு நிதி உதவி வாங்கக் கூடாதுன்னு மன்மோகன் சிங் சட்டம் போட்டாரு சகோ, அதத்தான் மோடியும் பின்பற்றாரு.

சாமானியன்: அட கூறுக்கெட்ட குக்கரு… மன்மோகன் சிங் போட்ட சட்டத்த தான் உங்க மோடி பின்பற்றுவார்னா, அத மீறி ஒன்னும் பண்ண முடியாதுனா எதுக்குயா அந்தாளு ஆட்சில இருக்காரு, பெசாம ஆட்சிய கலச்சிட்டு மன்மோகன் சிங்’கயே பிரதமரா ஆக்கிடவேண்டியது தான…

பக்தாள்: என்ன சகோ இப்டி சொல்டீங்க? வளர்ச்சி சகோ. ஊழலில்லா ஆட்சி சகோ. மோடி சகோ. பாரத் ஆத்தா கீ ஜே சகோ.

சாமானியன்: ஊழல் இல்லியா? எந்த வெளிநாட்டு கம்பெனி வேணாலும் எந்த கட்சிக்கு வேணாலும் எவ்ளோ வேணாலும் நன்கொடை குடுத்துக்களாம்னு சொல்லி 1976லேந்து இதுவரைக்கும் வெளிநாட்டுலேந்து அரசியல் கட்சிங்க வாங்குன எல்லா பணமும் சட்டப்படியானது தான்னு சட்டம் கொண்டு வந்து ஒலகத்துல யார் வேணாலும் நம்ம நாட்டு கட்சிக்கு நன்கொடை குடுக்கலாம்னு சொல்லி அத அந்த கட்சிங்க யார் குடுத்தான்னு யாருக்கும் கணக்கு காட்ட வேணாம்னு மோடி சட்டம் கொண்டு வந்தாரே இது தான் ஊழலில்லா ஆட்சியா சகோ?

பக்தாள்: அட இதுல என்ன ஊழல் இருக்கு சகோ?

சாமானியன்: நீ ஒரு ஊர்ல கல்லெக்டராவோ இல்ல தாசில்தாராவோ இல்ல எதோ ஒரு மினிஸ்டரா இருக்கன்னு வச்சிக்கோ. அரசாங்கத்துல ஒரு டென்டரு வருது. நான் உன்கிட்ட வந்து ஒங்களுக்கு 10% அன்பளிப்பா தரேன், அந்த ஆர்டர எனக்கு குடுங்கனு கேக்குறேன். நீ அந்த ஆர்டர எனக்கு குடுத்து 10% கமிஷனும் வாங்கிக்குட்ட. இப்போ இது ஊழலா இல்லியா?

பக்தாள்: அதெப்படி சகோ லஞ்சம் வாங்கலாம்? நிச்சியமா அது ஊழல் தான்.

சாமானியன்: ஒரு மினிஸ்டரா நீ இருக்கப்ப உன்கிட்ட காசு குடுத்து ஒரு சலுகை வாங்கிக்குட்டா அது லஞ்சம், ஊழல்னா, மினிஸ்டருக்கு காசு குடுக்காம உன் கட்சி வளர்ச்சி நிதி’ன்னு நூறு கோடிய குடுத்து எனக்கு சாதகமா ஒரு சலுகையோ சட்டமோ போடுன்னு சொன்னா அது ஊழல் இல்லியா? அப்டி ஒரு ஊழலயே சட்டப்படியா ஆவுறமாறி எந்த உள்நாட்டு கம்பெனியோ வெளிநாட்டு கம்பெனியோ எந்த கட்சிக்கு வேணாலும் ரகசியமா நன்கொடை குடுத்துக்கலாம்னு சொல்லி, அந்த நன்கொடை பணத்துக்கு வருமான வரிவிலக்கு வேற குடுத்தா அது ஊழல் இல்லியா? ஊழலயே சட்டப்படியா ஆக்குற இந்த சட்டம் தான ஒலகத்துலே பெரிய ஊழலா இருக்கும்? நாளக்கி அமெரிக்காவே நம்ம நாட்டு ஆளுங்கட்சிக்கு ஆயிரம் கோடியோ பத்தாயிரம் கோடியோ பணம் அனுப்பி அணு ஆயுதத்த பத்தியோ ராணுவ இரகசியங்கள பத்தியோ, அது இதுன்னு நாட்டு பாதுகாப்பயே அடகு வக்குற அளவுக்கு ஊழல் நடக்காதுன்னு சொல்ல முடியுமா? உள்நாட்டுலேந்து வெளிநாடு வரைக்கும் யார் வேணாலும் ரகசியமா காசு குடுத்துக்கலாம்னு சொன்னா அது தேசத்தோட பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் இல்லியா?

பக்தாள்: அப்டி இல்ல சகோ. அப்டிலாம் டென்டரு, ஆர்டரு, சலுகைலாம் இஷ்டத்துக்கு தூக்கி குடுத்துட முடியாது. டென்டரு அப்ளிகேஷன்லேந்து எல்லாத்தயும் நல்லா செக் பண்ண ஆளுங்க இருக்காங்க, நம்ம சிஏஜி வரைக்கும் இதுக்கு தான வச்சிருக்கோம்?

சாமானியன்: ஓஹோ! அப்ப இங்க எல்லாமே தரவ்வா செக் பண்ணி தான் நடக்குது?

பக்தாள்: ஆமா சகோ. ஒரு கம்பெனி கிட்டேந்து ஒரு டென்டரு அப்ளிகேஷன் வந்தா அந்த டென்டர் டீட்டெய்ஸ்லாம் நல்லா செக் பண்ணிட்டு ஓகே’னா தான் டென்டர் சாங்க்ஷன் ஆகும். இதுக்கு நடுவுல எங்க ஊழல் நடந்துற முடியும், சொல்லுங்க!

சாமானியன்: அட ஆமா’ல்ல? அது சரி, 58000 கோடி ரூபாக்கு 36 ரஃபாலே ஜெட் வாங்குறதுக்கு பிரான்ஸ் நாட்டு கம்பெனி கூட இந்தியா ஒப்பந்தம் பண்ணுச்சே, அந்த ஒப்பந்தம் சைன் பண்றதுக்கு வெறும் பத்து நாளைக்கு முன்னாடி தான் ஆரம்பிச்ச அணில் அம்பானியோட ரிலையன்ஸ் டிஃபென்ஸ்’க்கு ஒப்பந்தத்த குடுத்தாங்களே, அதுல ஊழல் இல்லியா? காங்கிரஸ் என்ன பண்ணுச்சோ இல்லியோ, தகவல் பெரும் உரிமைச் சட்டம் கொண்டு வந்து எங்க, என்ன நடக்குதுன்னு யார் வேணாலும் கேள்வி கேட்டு தெரிஞ்சிக்கலாம்னு கொண்டு வந்தாங்க, அது மூலமா எங்கெங்க யார் என்ன ஊழல் பண்ணாலும் அந்த தகவல ஈசியா கண்டுபுடிக்குறமாரி வழி கொண்டு வந்தாங்க… அதுலயே மாற்றம் கொண்டு வந்து அந்த சட்டத்த ஒண்ணுமில்லாம பண்ண ட்ரை பண்ண நீங்க தான் ஊழல ஒழிக்க வந்தவங்களா? அன்னக்கி அண்ணா ஹசாரே’ன்னு ஒரு தாத்தா லோக்பால் கொண்டுவரவரைக்கும் உண்ணா விரதம்னு இருந்து அதுக்கு நல்லா ஜால்ரா தட்டுன நீங்க தான ஆட்சிக்கு வந்து நாலு வருஷமாகியும், எங்க லோக்பால கொண்டு வந்தா மாட்டிப்போம்னு இப்பவரை அதுபத்தி பேச்சே எடுக்காம இருக்க நீங்களும் அந்த அண்ணா ஹசாரே தாத்தா, பாபா ராம்தேவ் கூட்டம் தான் ஊழல ஒழிக்க வந்தவங்களா?

பக்தாள்: அட என்ன ப்ரோ நீங்க, எல்லாத்தையும் ஊழல், ஊழல் னு சொல்றீங்க… அதெல்லாம் எதிர்க்கட்சிக்காரன் கெளப்பி விடுறது… ரிலையன்ஸ் டிபென்ஸ் கம்பெனி கூட ஒப்பந்தம் போட்டது நம்ம நாடு இல்ல… ரஃபாலே’வ தயாரிக்குற டச்சால்ட் நிறுவனம் தான் இந்தியால ரிலையன்ஸ் டிஃபென்ஸ் கம்பெனிய பார்ட்னரா செலக்ட் பண்ணிருக்கு… இதுல அரசாங்கத்துக்கு எந்த சம்மந்தமும் இல்ல… இதுல எப்டி ஊழல் இருக்குனு சொல்ல முடியும்? அந்தளவுக்கு ரிலையன்ஸ் கம்பெனி நல்ல ப்ரொப்போசல் குடுத்துருப்பாங்க, அவங்களோட ட்ராக் ரெக்கார்ட்’லாம் பாத்துட்டு தான் டச்சால்ட் கம்பெனி ரிலையன்ஸ் கம்பெனிய செலக்ட் பண்ணிருக்கும்…

சாமானியன்: அட என்ன வார்த்தை சொன்னீங்க சகோ… 45,000 கோடி கடன் வச்சிக்குட்டு, 2007ல அம்பானி க்ரூப் ரெண்டா பிரிஞ்சப்ப 45 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு வச்சிருந்தவரு இன்னக்கி வெறும் ரெண்டு பில்லியன் டாலர் சொத்தோட நஷ்டத்துல ஓடுற அணில் அம்பானியோட ட்ராக் ரெக்கார்ட பாத்துட்டு அந்த ஃபிரான்ஸ் கம்பெனி அணில் அம்பானியோட பத்து நாள் முன்னாடி ஆரம்பிச்ச கம்பெனி கூட ரஃபாலே டீல் சைன் பண்ணிருக்கா? இதுல அவங்க ப்ரொப்போசல் பாத்துட்டு இம்ப்ரஸ் ஆகி ஒப்பந்தம் குடுத்துருப்பாங்கன்னு சப்பக்கட்டு கட்டுறீங்களே சகோ… இந்தியாவோட ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி பண்ற DRDOவ விட, இந்தியாவோட விண்வெளிப் பாதுகாப்பு தளவாடங்கள உற்பத்தி செய்ற ஹிந்துஸ்தான் ஏரோநாடிகல்ஸ் கம்பெனிய விட வெறும் பத்து நாள் ஆன, இதுவரைக்கும் ஒரு விமானத்த கூட உற்பத்தி பண்ணி அனுபவம் இல்லாத ரிலையன்ஸ் டிஃபென்ஸ் கம்பெனி ப்ரொப்போசல் அவ்ளோ இம்ப்ரசிவ்வா இருக்கோ? இது எவ்ளோ பெரிய கேவலம் தெரியுமா? 58,000 கோடிக்கு இந்தியா ஒப்பந்தம் பண்றப்ப அது சம்மந்தப்பட்ட மூலப்பொருள் தயாரிச்சிக்குடுக்குற ஒப்பந்தத்த அரசுத்துறை நிறுவனங்களுக்கு வாங்கித்தர வக்கில்லாம 10 நாளைக்கு முன்னாடி ஸ்டார்ட் பண்ண கம்பெனிக்கு போய்ருக்குணா இது அரசோட இயலாமை இல்லாம வேற என்ன? அத இயலாமைன்னு கூட சொல்ல முடியாது, செய்ய முடியாம போறது வேற, ரகசியமா கமிஷன் வாங்கிக்குட்டு ஊழல் காசுக்கு ஆசப்பட்டு பண்றது வேற… அது சரி, ஆட்சிக்கு வரதுக்கு முன்னாடி 2014ல மோடி பிரச்சாரத்துக்கு சுத்துனது பூராவும் அதானி’யோட ப்ரைவேட் விமானம்… பிரச்சாரத்துக்கு செலவு பண்ணது பூராவும் கார்பரேட்டுங்க… இப்டி கார்பரேட் மொதலாளிலாம் சேந்து முதலீடு பண்ணி பிரதமர் ஆக்குனவரு ஆட்சிக்கு வந்தா அவங்களுக்கு சாதகமா எல்லாம் பண்ணாம வேற என்ன பண்ணுவாரு… இப்பவரை மோடி ஒவ்வொரு நாடு ஊர் சுத்தும்போதும் அவரு கூட யார் யாரு போறாங்கன்னு செய்தி ஆர்டிஐ பண்ணி கேட்டா தகவல் தர மறுத்துட்டு வர்றதுலே தெரில, எங்கெங்க எதுக்காக போறாருன்னு?

பக்தாள்: என்ன ப்ரோ நீங்க அந்த பப்பு மாறியே பேசுறீங்க… இது எல்லாமே எதிர்கட்சிக்காரங்க பண்ற சதி… மோடி பேர கெடுக்கனும்னே கெளப்பிவிடுற வதந்தி… அவரு காசு வாங்குனாருன்னுரதுக்கு எதாவது ஆதாரம் இருக்கா? ஆதாரம் இல்லாம அத எப்டி ஊழல்னு சொல்ல முடியும்?

சாமானியன்: ஓஹோ! அப்போ ஊழல் ஊழல்னு சொல்லி நாடாளுமன்றத்தையே நடத்த விடாம காங்கிரஸ் ஆட்சில 2ஜி கேஸ் பத்தி எல்லா ஊடகத்துலயும் கெளப்பி விட்டு 1,76,000 கோடி ஊழல் பண்டாங்கன்னு சொல்லி இன்னக்கி வரை எந்த ஆதாரமும் கெடைக்காம சிபிஐ முழிக்குதே அது என்ன ஆதாரத்தோட தான் பிரச்சாரம் பண்ணி ஆட்சிக்கு வந்தாரா உங்க மோடி?

பக்தாள்: 2ஜி ஊழல் நடந்துச்சுன்னு சிஏஜி தான் சொன்னாரு… அத தான் நாங்க பிரச்சாரம் பண்ணோம்… அது வந்து, அவங்க ஆட்சி விட்டு போய்டுவோம்னு அவங்களுக்கே தெரிஞ்சிடுச்சி சகோ, அதான் ஆட்சி முடியுறதுக்குள்ள எல்லா ஆதாரத்தையும் அழிக்க எதாவது பண்ணிருப்பாங்க… பட் மோடி அவங்கள சும்மா விட மாட்டாரு, ஊழல ஒழிச்சே தீருவாறு…

சாமானியன்: 2ஜி’ல உண்மைலே அப்டி அரசுக்கு அவ்ளோ எழப்பு வந்துச்சுனா அப்போ இன்னக்கி அத விட அதிகமா 3ஜி’லயும் 4ஜி’லயும் அலைக்கற்றை விக்குறதுல அரசுக்கு வருமானம் அதிகமா வரணுமே, ஏன் வரல? அவங்க ஆட்சில இருந்தப்ப கூட சிபிஐ தைரியமா சுதந்திரமா எல்லா விசாரணையும் நடந்துச்சே… கனிமொழி, ஆ.ராசா ன்னு எல்லாரும் அர்ரெஸ்ட் ஆகி விசாரணை லாம் நடந்துச்சு, ஊழல ஒழிப்போம்னு சொல்ற உங்க மோடி இதுவரைக்கும் பேசிட்ருக்காரே தவற ஒன்னும் பண்ண மாட்றாரே… ஒன்னு ஊர் ஊரா சுத்த கெளம்பிடுறாரு, இல்ல எலக்ஷன் பிரச்சாரத்துக்கு கெளம்பிடுறாரு… ஆரம்பிக்கவே இல்லாத ஒரு இன்ஸ்டிடியூட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததுன்னு அறிவிக்குரீங்கன்னா அவங்க உங்களுக்கு எவ்ளோ காசு குடுத்துருப்பாங்க? இதுலாம் உங்க ஊருல ஊழல் இல்லியோ? கருப்புப்பணத்த மீட்டு ஆளுக்கு 15 லட்சம் போடுறேன்னு சொல்லி ஆட்சிக்கு வந்துட்டு கருப்புப்பணத்த மீக்கவும் இல்ல, ஊழல ஒழிக்கவும் இல்ல…

பக்தாள்: ப்ரோ, இப்டிலாம் மனசாட்சி இல்லாம பேசாதீங்க ப்ரோ… டீமானிடைசேஷன் பண்ணி மோடி கருப்புப்பணத்த ஒழிச்சிட்டாறுல்ல? அது எவ்ளோ பெரிய விஷயம்?

சாமானியன்: யோவ்… வாய்ல எதாவது வந்துற போகுது… டீமானிடைசேஷன் நடந்து எந்தெந்த பேங்க்ல எவ்ளோ காசு டெபாசிட் ஆய்ருக்குன்னு ஆர்டிஐ போட்டு பாத்தா குஜராத்ல இருக்க அஹ்மதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கில தான் நாட்டுலே அதிக பணம் டெபாசிட் ஆய்ருக்கு… அந்த பேங்க்ல மட்டும் அஞ்சி நாள்ல 745 கோடி டெபாசிட் பண்ணிருக்காங்க… 5 நாள்ல 745 கோடி’ன்னா ஒரு நாளக்கி 149 கோடி, ஒரு நாளக்கி 9 மணி நேரம் பேங்க் வேலை செஞ்சிர்ந்தா கூட ஒரு மணி நேரத்துக்கு 16 கோடி சொச்சம், ஒரு நிமிஷத்துக்கு 27 லட்சம், ஒரு நொடிக்கு 45 ஆயிரம் ரூபா டெபாசிட் பண்ணிருக்காங்க… அவ்ளோ ஃபாஸ்ட்ல பணம் டெபாசிட் ஆய்ருக்குன்னா இது நேர்மையா எதேர்ச்சையா நடந்துருக்குன்னு சொல்லுறீங்களா சகோ?

பக்தாள்: என்ன ப்ரோ நீங்க எல்லாத்தையும் சந்தேகத்தோடையே பாக்குறீங்க? யூ ஆர் அன் ஆண்டி இண்டியன் ப்ரோ…

சாமானியன்: அட இது இப்ப தான் உங்களுக்கு தெரியுமா? இத எப்பவோ உங்ககிட்ட எதிர்பாத்தேன். நான் சந்தேகம் லாம் படல ப்ரோ, உறுதியா சொல்றேன். ஏன்னா சாதாரண பேங்க் விட கூட்டுறவு பேங்க்ல எப்டி இவ்ளோ டெபாசிட் ஆய்ருக்கும்னு பாத்தா அந்த கூட்டுறவு பேங்குக்கு அந்த சமயத்துல டைரக்டரா இருந்தது நம்ம பாஜக தலைவர் அமித் ஷா தான்…. சரி, அந்த பேங்குக்கு அடுத்து அதிக டெபாசிட் ஆனது எங்கன்னு பாத்தா அதும் குஜராத்ல ராஜ்கோட் மாவட்ட கூட்டுறவு வங்கில 693 கோடி அஞ்சி நாள்ல டெபாசிட் பண்ணிருக்காங்க… அந்த பேங்குக்கு தலைவர் யார்னு பாத்தா குஜராத் கேபினட் மினிஸ்டர் ஜயேஷ்’ஆம்… இதுக்கு மேல எனக்கு எப்டி ப்ரோ சந்தேகம் இருக்கும்… சின்ன குழந்தைய கேட்டா கூட சொல்லும், டீமானிடைசேஷன் உங்ககிட்ட இருந்த கருப்பு பணத்தலாம் வெள்ளையாக்க தான் பண்ணீங்கன்னு…. ரெண்டு பேங்க்ல மட்டும் இவ்ளோனா நாடு முழுக்க எவ்ளோ பணம் கைமாறி இருக்கும், இதுல மோடி டீமானிடைசேஷன் அறிவிக்குரதுக்கு முன்னாடி எத்தனை கோடி எங்கெங்க எத்தனை நாளுக்கு டெபாசிட் ஆவுச்சோ! யாருக்கும் தெரியும்… இதுல பல பேர லைன்ல நிக்க வச்சே கொன்னுடீங்க… வேகமா போய்ட்டுருந்த நாட்டோட வளர்ச்சிய முட்டுக்கட்ட போட்டு இப்போ அதா எப்டி சமாளிக்குறதுனே தெரியாம முழிச்சிட்ருக்கீங்க…

சரி மோடி மோடின்னு சொல்றீங்கல்ல, உங்க மோடி இதுவரைக்கும் அப்டி என்ன தான் நல்லது பண்ணாருன்னு கொஞ்சம் சொல்லுங்க ப்ரோ, நானும் தெரிஞ்சிக்குறேன்…

பக்தாள்: என்ன ப்ரோ இப்டி சொல்டீங்க? வரலாறு காணாத வளர்ச்சி ப்ரோ… ஊழலில்லா ஆட்சி ப்ரோ… ஒலக நாடு பூரா இந்தியாவ பாத்து பயப்புடுற அளவுக்கு இந்தியா முன்னேறிருக்குனா அதுக்கு காரணம் மோடி தான ப்ரோ…

சாமானியன்: யோவ், இன்னொரு டைம் ஊழலில்லா ஆட்சின்னு சொன்ன, அப்புறம் நீ பல்லில்லா முகத்தோட தான் வீட்டுக்கு போணும்… அது சரி, வளர்ச்சியா? உலகம் பூரா பொருளாதார மந்தம் வந்தப்பவும் மன்மோகன் சிங் ஆட்சில 2004 லேந்து 2009 வரைக்கும் 8.87%ல வளந்த நம்ம நாடு, 2009 லேந்து 2014 வரைக்கும் 7.39%ல வளந்துச்சே அது வளர்ச்சியா, இல்ல கடந்த நாலு வருஷத்துல 7.35%ல மோடி ஆட்சில வளர்றது வளர்ச்சியா?

பக்தாள்: ப்ரோ, இது ஃபேக்’கா கெளப்பிவிட்ட நியுஸ் ப்ரோ. இது உண்மை இல்ல. யாரோ மோடி பேர கெடுக்கனும்னே இப்டி பண்றாங்க… மோடி வந்தப்றம் தான் இந்த ஒலகத்துலே இந்தியா ஃபாஸ்ட்டா வளருது…

சாமானியன்: அட இந்த புள்ளி வெவரத்த வெளியிட்டதே உங்க அரசாங்கத்தோட தேசிய புள்ளியியல் ஆணையம் தான். அதும் வெளியிட்டு அசிங்கப்பட்டதும் என்னமோ கம்மி மார்க் வாங்கிட்டு அது வீட்டுக்கு தெரிஞ்சிடுமோன்னு டெஸ்ட் பேப்பர மறச்சி வக்கிற சின்ன பையன் மாறி அந்த வெவரம் இருந்த எல்லா அரசு வெப்சைட்லயும் தூக்கிட்டு சில்ற வேலைலாம் பாக்குறாரு… இதுல வளர்ச்சி நாயகன், மிகச்சிறந்த ஆளுமைனு வேற பீத்திக்குறீங்க… மன்மோகன் சிங் ஆட்சிலயாவது கச்சா எண்ணெய் வரலாறு காணாத அளவுக்கு பேரலுக்கு 130 டாலர் இருந்துச்சு… அதுனால பெட்ரோல் 70 ரூபாய்க்கு வித்தப்ப பிரளயமே வந்துடுச்சுன்னு போராட்டம் பண்ணவங்கலாம் இப்போ கச்சா எண்ணெய் பேரல் 65 டாலருக்கு விக்குறப்ப பெட்ரோல் 81 ரூபாய்க்கு விக்குறத நியாயப்படுத்துறது தான் வளர்ச்சியா? ஏன் ஜிஎஸ்டிய பெட்ரோலுக்கும் டீசலுக்கும் கொண்டு வந்தா உங்க மொதலாளிக்கு வருமானம் குறையும்னு தான பண்ணாம வச்சிருக்கீங்க?

பக்தாள்: அட என்ன ப்ரோ நீங்க பழசயே பேசிட்ருக்கீங்க… இப்போ நடக்றத பத்தி பேசுங்க ப்ரோ… பழச பேசி என்ன ஆக போது, சொல்லுங்க…

சாமானியன்: பார்றா… ஆனா ஊனா எதுக்கெடுத்தாலும் நேரு அத பண்ணாரு, இத பண்ணாருன்னு நீலிக்கண்ணீர் வடிக்குற மோடி பழச பேசுறாரா, நாங்க பேசுறோமா? எதுகெடுத்தாலும் நேரு தான் காரணம், நான் ஒரு ஏழைத்தாயின் மகன்னு சீன போடுறது யாருன்னு ஊருக்கே தெரியும்… நாட்டு மக்களுக்கு தேவைப்படுறப்ப காசு குடுக்க மாட்டீங்க, குடுக்குரவனையும் விட மாட்டீங்க… பாரத மாதா, பாரத மாதானு சொல்லி பெண்களுக்கு எதிரா அநீதி நடந்தா, பயங்கரமான ஆயுதங்களோட தீவிரவாதிய கைது பண்ணா அந்த ரேப் அக்யூஸ்ட்டுக்கு ஆதரவா, அந்த தீவிரவாதிக்கு ஆதரவா ஊர்வலம் போவீங்க… உங்களுக்கு எதிரா பேசுற ஊடகத்த குறி வச்சி ரைடு விட்டு உங்களுக்கெதிரா யாரையும் பேச விடாம அடக்குவீங்க… ஊழல் நடக்குற வாய்ப்பு இருக்க வழியலாம் ஊழல்னே சொல்ல முடியாதளவுக்கு சட்டப்பூர்வமாக்கிடுவீங்க…  ஊழல கண்டுபுடிக்குற வழியையும் அடைச்சிட்டு ஊழலே நடக்கலன்னு சீன போடுவீங்க… உங்களுக்கு எதிரா எதாவது நீதிபதி தீர்ப்பு குடுப்பாருன்னு தெரிஞ்சா அவர போட்டு தள்ளிட்டு மார்னிங் வாகிங் போறப்ப எறந்துட்டாருன்னு செட்டப் பண்ணுவீங்க… யாரெல்லாம் உங்களுக்கு எதிரா நேர்மையா தீர்ப்பு குடுப்பாருன்னு தெரியுதோ அவங்கள நீதிமன்றமே பரிந்துரை பண்ணாலும் அவங்கள நியமிக்காம இழுத்தடிப்பீங்க… எங்க எலக்சன் நடந்தாலும் எங்கெல்லாம் ஒரு பட்டன அழுத்துனா இன்னொரு சின்னத்துக்கு ஓட்டு உழுதுன்னு செய்தி வருதோ அங்கெல்லாம் சொல்லி வச்சமாரி உங்க கட்சிக்கே ஓட்டு விழும்… கேட்டா ஓட்டு மெஷின் பழுதுன்னு சொல்லி அது சம்மந்தப்பட்ட நியுஸ் வெளிய ரொம்ப வராம அடக்கிடுவீங்க… பத்தாததுக்கு உங்களால ஆட்சிக்கு வர முடியாத எடத்துல’லாம் கவர்னர் மூலமா குறுக்கு வழில எல்லா பேக்கிரௌண்ட் வேலைலாம் பாப்பீங்க… சிபிஐ, போலிஸ், எலக்சன் கமிஷன், ரிசர்வ் பேங்க், நீதித்துறைன்னு எல்லா துறையயும் அரசாங்கமே கட்டுப்பாட்டுல கொண்டுவந்து இஷ்டத்துக்கு யூஸ் பணுவீங்க… ஸ்வச்பாரத், டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா, ஸ்கில் இந்தியா’ன்னு புதுசு புதுசா ஏற்கனவே இருக்குற எல்லா திட்டத்தையும் பேர மாத்தி புதுசா கொண்டுவரமாரி பில்டப் குடுத்து போட்டோக்கு வளச்சி வளச்சி போஸ் குடுக்க வேண்டியது… அத மக்கள் வரிப்பணத்துல நாலாயிரம் கோடிக்கு மேல விளம்பரத்துக்கு மட்டுமே செலவு பண்ண வேண்டியது… ஆதார், எஃப்டிஐ, ஜிஎஸ்டி, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையேற்றம்னு அன்னைக்கி நீங்க எது எதுலாம் சொல்லி நாடாளுமன்றத்த மொடக்குணீங்களோ அதுலாம் இன்னக்கி நீங்களே முன்ன நின்னு செய்றீங்க… வளர்ச்சி வளர்ச்சின்னு சொல்லி ஆட்சிய புடிச்சிட்டு இப்போ அத பத்திலாம் எதுமே பேசுறதில்லயே ஏன்? ஸ்மார்ட் சிட்டி திட்டம், அச்சே தின், டீமானிடைசேஷன் அது இதுனு உங்க திட்டத்த பத்திலாம் உங்க பிரதமரு இப்பலாம் வாயே தெறக்குறதில்லயே ஏன்? உங்க லட்சணம் உங்களுக்கே தெரியாதா என்ன? பேசுனா உங்க வண்டவாளம் லாம் கப்பலேரிடும்னு தெரியாமலா பாகிஸ்தான், நேரு அது இதுன்னு பிரிவினைய உண்டு பண்றீங்க? ஆனா ஊனா மாடுங்கள வச்சி கலவரம் பண்ண வேண்டியது… ஒரு வாரத்துக்கு முன்னாடி கூட மாடுங்கள கடத்திட்டு போறதா சொல்லி ரெண்டு பேர ஒரு கும்பல் சேந்து தாக்கிருக்கு, அத தடுக்க வந்த போலிஸ் கலவரம் பண்ணவங்கள ஒன்னும் பண்ணாம பாதிக்கப்பட்ட அந்த ரெண்டு பேர அரஸ்ட் பண்ணிடு போயிருக்கு…. ஆனா உலகத்துலே மாட்டுக்கறி ஏற்றுமதில நம்பர் 1 இந்தியா தான்… உண்மைலே மாடு மேல அக்கறை இருந்தா அத தடை பண்ண சொல்லு பாக்கலாம்…. உங்களுக்கு மாடு மேலலாம் அக்கறை கிடையாது,.. உங்களுக்கு பிரிவினை ஏற்படுத்த ஒரு காரணம் வேணும்.. வளர்ச்சி மாயைய காமிச்சி இனி ஏமாத்த முடியாதுன்னு பிரிவினைய உண்டு பண்ண வேண்டியது… மதத்துல ஆரம்பிச்சி, சாதி, மொழி’ன்னு எல்லாத்துலயும் பிரிவினைய உருவாக்கி அதுல குளிர் காய வேண்டியது… அப்ப தான நம்ம வியாபாரம் நல்லா நடக்கும்… உங்களுக்கு எப்டியும் ஓட்டு போட மாட்டாங்கன்னு முஸ்லிம் அதிகமா இருந்த பகுதில 47 வருஷமா குடி இருக்க 40 லட்சம் மக்கள குடியுரிமையே இல்லன்னு சொல்லி ஒரே நாள்ல அகதி ஆக்கியாச்சு… ஆனா அவங்கள நாட்ட விட்டு அனுப்பமாட்டோம்னும் சொல்லி சமாளிக்குறீங்க… குடியுரிமை இல்லாம இங்க இருந்துக்கோங்கன்னா அவங்க ஓட்டு போட முடியாது, உங்களுக்கெதிரா ஓட்டு போட்டுடக்கூடாதுன்னு ஓட்டுரிமையவே நீக்குறீங்க… ட்விட்டர், பேஸ்புக்னு எல்லா எடத்துலயும் ஐடி கம்பெனி மாறி வேலைக்கு ஆள் எடுத்து ஷிஃப்ட் போட்டு மோடி பத்தியும் அரசாங்கம் பத்தியும் பேசுறவங்கள குறிவச்சி கூட்டமா வந்து ட்ரோல் பண்ண வேண்டியது., மெரட்ட வேண்டியது… எங்க பாத்தாலும் மதக்கலவரம் நடக்குற சூழல உருவாக்க வேண்டியது… இப்டி தான் இவ்ளோ வருஷம் இருந்துச்சான்னு எல்லாரும் யோசிச்சிப் பாத்தாலே தெரியுமே… அறுவது வருஷமா காங்கிரஸ் நாட்ட கெடுத்துடாங்கன்னு எங்க பாத்தாலும் பேசுறாரே, காங்கிரசுக்கு பதில் நீங்க அறுவது வருஷம் ஆண்டுருந்தா நாட்ட கூறு போட்டு வித்துருக்க மாட்டீங்க? எதிர்த்து கேள்வி கேக்குறவன ஆண்டி இண்டியன்னு வேற சொல்வீங்க… போங்க டா நீங்களும் உங்க தேச பக்தியும்…

பக்தாள்: விடுங்க சகோ… அரசியல்னா இதெல்லாம் இருக்கத்தான் செய்யும், இதெல்லாம் சகஜம்… கண்டுக்காதீங்க சகோ… நமக்கு எப்பவுமே நாடு தான் முக்கியம்… பாரத் ஆத்தா கீ ஜே…. பாரத் ஆத்தா கீ ஜே….

சாமானியன்: போடாங்ங்க்க்…….. நாடு முக்கியமா இருந்தா நீ ஏன் டா இப்டி இருக்க? இன்னும் என்னால பேச முடியும் தம்பி, ஆனா அத கேக்குற பொறுமை உனக்கும் கிடையாது, இத படிக்குறவங்களுக்கும் இருக்காது… அதுனால இதோட நிறுத்திக்குறேன்…


முகப்புப்படம்: pixabay.com

குறிப்பு: இப்பதிவில் சுவாரசியத்தைக் கூட்ட நகைச்சுவையுடனும் இயல்பாகவும் இருக்கும் வகையில் உரையாடல் அமைக்கப்பட்டிருக்கிறது. எந்தவொரு தனி நபரையோ, குழுவையோ, இன்னபிற வகுப்பினரையோ தரக்குறைவாகவோ, அவதூறாகவோ பேசுவதோ புண்படுத்துவதோ நோக்கமல்ல. இதைப்படித்துவிட்டு நண்பர்களுடன் பகிரவும். நன்றி.


 

One Comment Add yours

  1. Gowtham says:

    Narration super …. A very detailed analysis reported as a blog . Excellent one

    Liked by 1 person

What do you feel about this?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s