உள்ளே என்ன நடக்கிறது என்றே மறைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு சாதனத்தை நாம் வாங்கி நம் வீட்டிற்குள் வைப்போமா என்ன? அவை நம் வீட்டைக் கொளுத்துமா, நம் வீட்டைப் படம்பிடித்து யாருக்கோ அனுப்புமா என்று எந்தவித செயல்பாடுகளிலும் வெளிப்படைத்தன்மையின்றி இருக்கும் ஓர் சாதனத்தை நாம் எப்படி நம்புவோம்?
நம்முடைய ஸ்மார்ட்போன்களிலும் கணிப்பொறிகளிலும் நாம் பெரும்பாலும் பயன்படுத்தும் இயங்குதளங்கலான Google Android, iOS, Microsoft Windows ஆகிய மென்பொருட்களுக்கும் அவற்றின் உரிமையாளர்களான பெருநிறுவனங்களுக்கும் நம் தரவுகளின் மீதும் நம் மீதும் எவ்வளவு அதிகாரம் இருக்க முடியும்?
Category: உன்னைப் பணயம் கொள்ளும் இணையம்!
உன்னைப் பணயம் கொள்ளும் இணையம் – பகுதி 8
கடந்த சில வாரங்களாக செய்திகளிலும் சமூக வலைதளங்களிலும் அதிகமாகப் பேசப்பட்டுவரும் தலைப்பு ‘Momo Challenge’. மோமோ என்றால் என்ன? யார் அந்த மோமோ? அவர்களின் பின்புலம் என்ன? Blue Whale விளையாட்டைப் போன்றே தற்போது Momo challenge என்னும் விளையாட்டு தற்போது சமூக வலைதளங்களில் பேச்சுப்பொருளாகி வருகிறது.
உன்னைப் பணயம் கொள்ளும் இணையம் – பகுதி 7
2017ஆம் நிதியாண்டில் மட்டும் Ola நிறுவனம் 4,898 கோடி ரூபாயும், Flipkart நிறுவனம் 8,771 ரூபாயும், Paytm நிறுவனம் 899.6 கோடி ரூபாயும், Big Basket நிறுவனம் 312 கோடி ரூபாயும் நஷ்டமடைந்திருக்கிறார்கள். இவ்வளவு நஷ்டத்தில் ஓடினாலும் நமக்கு சலுகைகளை வாரி வழங்கிக்கொண்டிருக்கிறார்களென்றால் அது ஏன் என்று நாம் சிந்தித்திப் பார்க்க வேண்டாமா?
உன்னைப் பணயம் கொள்ளும் இணையம் – பகுதி 6
எதற்காக நான் என் நண்பருடன் பேசும் தகவல்கள் இன்னொரு நிறுவனத்தின் செர்வர்களில் சேமிக்கப்பட வேண்டும்? எதற்காக நான் என் நண்பருக்கு அனுப்புகின்ற தகவல்கள் இன்னொருவரால் படிக்கப்பட வேண்டும்? நான் அனுப்பும் தகவல்கள் என் நண்பருக்கு நேரடியாக செல்ல வழி இல்லையா/இருக்க முடியாதா? நான் அனுப்பும் தகவல்கள் இன்னொரு நிறுவனத்தின் செர்வர்களில் சேமிக்கப்பட்டால் தான் என் நண்பரால் பெற முடியுமா என்ன?
உன்னைப் பணயம் கொள்ளும் இணையம் – பகுதி 5
இன்றைய இணையத்தின் அடிப்படைக் கட்டமைப்பிலேயே பல்வேறு பிழை இருப்பதை நாம் யாவரும் அறிந்துவைத்திருக்கவில்லை. அரசாங்கங்கள், பெருநிறுவனங்கள் என தங்கள் விருப்பப்படி இணையத்தை கட்டுப்படுத்தும் வகையிலான இன்றைய இணையம் எப்படி மக்கள் இணையமாக இருக்க முடியும்?
உன்னைப் பணயம் கொள்ளும் இணையம் – பகுதி 4
உங்கள் ஒவ்வொரு அசைவுகளையும் ஒவ்வொரு நொடியும் கண்காணித்துக்கொண்டிருக்கும் இணையம் உண்மையில், ‘உன்னைப் பணயம் கொள்ளும் இணையம்’ அல்ல.
‘உன்னையே கொள்ளும்/கொல்லும் இணையம்’
தான்!
உன்னைப் பணயம் கொள்ளும் இணையம் – பகுதி 3
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மூலம் தன்னிச்சையாக இயங்கும் வகையில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட அறிவேந்திரங்கள் (smart machines) மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறிச்சென்று, மனிதர்களுக்கே எதிராய் திரும்புவதாகப் பல திரைப்படங்கள் வந்திருக்கின்றன. உதாரணத்திற்கு Terminator, iRobot, எந்திரன், Matrix என பட்டியல் நீளும். உண்மையில் அந்த அளவிற்கு தொழில்நுட்பம் வளர முடியுமா? மனிதர்களின் கட்டுப்பாட்டைத்தாண்டி எந்திரங்கள் இவ்வுலகைத் தங்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரும் அளவிற்கு மனிதர்களை விஞ்சும் அறிவாற்றலை எந்திரங்கள் பெற முடியுமா? மனிதர்களின் கண்டுபிடிப்புகளாலேயே மனித இனம் அழிக்கப்படுமா?
உன்னைப் பணயம் கொள்ளும் இணையம் – பகுதி 2
நாம் யாரிடம் பேசுகிறோம், என்ன பேசுகிறோம், எங்கு செல்கிறோம், என்ன வாங்குகிறோம், என்ன உண்ணுகிறோம், எவருடன் பயணிக்கிறோம், நாம் இணையத்தில் எதை பார்க்கிறோம், எதை தேடுகிறோம், எதை படிக்கிறோம், நம் திட்டங்கள் என்ன என அனைத்தையும் இணைய நிறுவனங்கள் உளவுப் பார்த்துக்கொண்டும் திருடிக்கொண்டும் இருக்கின்றன.